Home SPORTS தமிழகம், சாய் அணிகள் அரையிறுதி போட்டியில் மோதல்

தமிழகம், சாய் அணிகள் அரையிறுதி போட்டியில் மோதல்

0
SHARE

சென்னையில் நடைபெற்றுவரும் அரைஸ் ஸ்டீல் 9வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் போட்டியில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் சாய், தமிழக அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன. நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதி போட்டியில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன.

சீனியர் தேசிய ஹாக்கி போட்டியில் மொத்தம் 41 அணிகள் பங்கேற்றன. இவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் நடந்த போட்டிகளின் முடிவில் 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

இன்று எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற காலிறுதி போட்டி ஒன்றில் எச் பிரிவில் முதலிடம் பிடித்த சாய் அணியும் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த மகாராஷ்டிரா அணியும் மோதின. Êசாய் அணி வீரர்கள் மிக அபாரமாக விளையாடி எதிரணியை திக்குமுக்காடச்செய்தனர். 

Êசாய் அணிக்கு பாபி சிங் தாமி 22வது நிமிடத்தில் பீல்டு கோலும், 59வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோலும் அடித்து 2க்கு0 என வெற்றி பெற உதவினார். இந்த வெற்றி மூலம் சாய் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜி பிரிவில் முதலிடம் பிடித்த தமிழக அணியும், பி பிரிவில் முதலிடம் பிடித்த சசாஷ்த்ர சீமா பல் (எல்லை பாதுகாப்பு அணி) அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக போராடின. முதல் 15 நிமிட நேரம் கோலின்றியே முடிந்தன. அதன்பிறகு 5வது நிமிடத்தில் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பில் தமிழக அணி வீரர் ராயர் ஒரு பீல்டு கோல் அடித்து 1க்கு0 என கணக்கை துவங்கினார்.

அதன்பிறகு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் முத்துசெல்வன் கோல் அடித்து 2க்கு0 என உயரச்செய்தார். இதே நிலையில் முதல்பாதி ஆட்டம் முடிந்தது.

2வது பாதி ஆட்டத்தில் எஸ்.எஸ்.பி. வீரர்கள் கோலடிக்க கடுமையாக போராடினர். இதற்கு பலன் கிடைத்தபாடில்லை. இதற்கிடையில் 41வது நிமிடத்தில் ராயர் மற்றொரு கோலடித்து தமிழக அணியை 3க்கு0 என மேலும் உயர்த்தினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 3க்கு0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்தது. நாளை ஓய்வு நாள். நாளைமறுநாள் (19ம் தேதி) காலை 7.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தமிழக அணி, சாய் அணியை எதிர்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here