Home News INDIA பிரித்தாளும் மோடி அரசை நீக்குவதற்காக முயற்சி சோனியா காந்தி

பிரித்தாளும் மோடி அரசை நீக்குவதற்காக முயற்சி சோனியா காந்தி

0
SHARE

பிரித்தாளும் மோடி அரசை நீக்குவதற்காக பலதரப்பட்ட தலைவர்களின் ஒன்றுபட்ட முயற்சி என கொல்கத்தா பிரமாண்ட பொதுக்கூட்டம் குறித்து  காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 

பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்கள் பங்கேற்றனர்.“ மாநாட்டில் பேசிய தலைவர்கள், மத்தியில் உள்ள பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கினர். மோடி ஆட்சியில், மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாகவும், நாட்டில் ஒற்றுமை சீர்குலைந்து விட்டதாகவும் அவர்கள் விமர்சித்தனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் தவறிவிட்ட மத்தியில் உள்ள பாஜக அரசை,  வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வீழ்த்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டிருப்பது பற்றி கருத்து தெரிவித்து உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி,பிரித்தாளும் மோடி அரசை நீக்குவதற்காக பலதரப்பட்ட தலைவர்களின் ஒன்றுபட்ட முயற்சி எனவும்,  நாடாளுமன்றத் தேர்தலில்  ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும்எனவும் தெரிவித்தார். நாட்டில் உள்ள விவசாயிகள் மீதும் எல்லையில் உள்ள வீரர்கள் மீதும் ஒரு வித நெருக்கடி நிலவுகிறது எனவும்,  இளைஞர்கள் மற்றும்  மீனவர்கள் பேரிழப்பை சந்தித்து வருவதாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here