Home News இடைத்தேர்தல் நடைபெற்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் முக ஸ்டாலின்

இடைத்தேர்தல் நடைபெற்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் முக ஸ்டாலின்

0
SHARE

காலியாக உள்ள  சட்டமன்றத் தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடைபெற்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக தலைவர்  முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் திமுக சார்பில்  நடைபெற்ற  ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் பேசிய  அவர்,கீழடி ஊராட்சி வரலாற்று சிறப்பு வாய்ந்த ஓர் இடம் எனவும் இங்கு வந்தது பெருமையாக இருக்கிறது எனவும் கூறினார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், தமிழ்நாட்டின் வரலாற்றை மறைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இதனால் தான் கீழடி அகழாய்வை தடுத்து நிறுத்தினர் எனவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றால் தமிழகத்தில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் நிகழும் என ஸ்டாலின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here