Home TAMILNADU news தலைவர் பதவியில் இல்லாவிட்டாலும் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்:திருநாவுக்கரசர்

தலைவர் பதவியில் இல்லாவிட்டாலும் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்:திருநாவுக்கரசர்

0
SHARE

தலைவர் பதவியில் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்பதும் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பெற வேண்டும் என்பதும் தன்னுடைய விருப்பம் என்று தெரிவித்தார். தமிழகத்தில் காங்கிரஸ் தலைமை மாற்றப்பட்டாலும் ராகுல்காந்தியின் ஆலோசனைப்படி காங்கிரஸ் கட்சிக்காக தொண்டர்களுடன் இணைந்து செயல்படுவேன் என உறுதியளித்த திருநாவுக்கரசர் கே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக பதவியேற்கும் விழாவிலும்  பங்கேற்க இருப்பதாக கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை மட்டுமின்றி கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here