Home News என்ஜின் இல்லாத ரெயில்- பிரதமர் மோடி

என்ஜின் இல்லாத ரெயில்- பிரதமர் மோடி

0
SHARE

இந்தியாவின் முதல் என்ஜின் இல்லாத ரெயிலை, வரும் 15-ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.

இந்தியாவின் முதல் முறையாக ‘ரெயில்-18’ என்ற பெயரில் என்ஜின் இல்லாத ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது., சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட  இந்த ரயிலுக்கு  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள இந்த ரெயிலுக்கு என்ஜின் தனியாக இருக்காது. இந்நிலையில், நாட்டின் முதல் என்ஜின் இல்லா ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ம் தேதி டெல்லியில் துவக்கி வைக்க உள்ளார். ‘டெல்லியில் காலை 10 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியின்போது, என்ஜின் இல்லா ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்து உரையாற்ற உள்ளார். இந்த ரெயில் டெல்லியில் இருந்து வாரணாசி வரை இயக்கப்படுகிறது. 30 ஆண்டு காலமாக இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மாற்றாக இது அமையும். டெல்லி – மும்பை ராஜ்தானி வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தின்போது, இந்த என்ஜின் இல்லா ரெயில் 180 கிலோ மீட்டர் வேகம் வரை சென்றது. இதன்மூலம் இந்தியாவின் அதிவேக ரெயில் என்ற பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here