Home News தமிழக நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படும்

தமிழக நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படும்

0
SHARE

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில்  நாளை தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிகறது.

கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய இந்தக் கூட்டத் தொடர்   ஐந்து நாட்கள் நடைபெற்றது.  இந்தக் கூட்டத் தொடர்  8ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உரையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை மீண்டும் தொடங்குகிறது. 2019-20-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை காலை 10 மணிக்கு நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், வழக்கத்தைவிட இந்தநிலை அறிக்கையில்,  புதிய அறிவிப்புகளும்,சலுகைகளும் இடம் பெறும் என தெரிகிறது.  இந்தக் கூட்டத் தொடரில் கோடநாடு விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி நிவாரணம் போன்ற பல்வேறு முக்கிய பிரச்சினைகளை பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here