Home News DMS – வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, தொடங்கி வைத்தனர்.

DMS – வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, தொடங்கி வைத்தனர்.

0
SHARE

சென்னை தேனாம்பேட்டை DMS – வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை – டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நிறைவுற்று, சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இந்த வழித்தடத்தில், இன்று முதல், மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது. 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்த சேவையை, பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் திருப்பூரில் இருந்து,  வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தனர்.
இந்த வழித்தடத்தில் ஆயிரம்விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், ஐகோர்ட்டு, மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களையும் இருவரும் இணைந்து திறந்து வைத்தனர். சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்கவிழாவில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், தொழில் துறை அமைச்சர் எம்.சி சம்பத் , மெட்ரோ ரயில் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரை இருந்த சேவை, தற்போது வண்ணாரப்பேட்டையிலிருந்து டிஎம்எஸ் வரையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 
வண்ணாரப்பேட்டையிலிருந்து புறப்படுகிற மெட்ரோ ரயில் 40 நிமிடங்களில் விமான நிலையத்தை அடைந்துவிடும். இது சாலையில் பயணிக்கும் நேரத்தில் பாதிக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
 சேவையை தொடக்கி வைத்த பின்னர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு, செய்தியாளர்கள் , பொதுமக்கள் ஆகியோர் சென்னை சென்ட்ரல் முதல் டி.எம்.எஸ் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங், 
சென்னை மெட்ரோ பேஸ் பணிகளுக்கு உதவிய அனைத்து ஊழியர்கள், பணியாளர்கள், மாநில அரசு ஆகியவற்றுக்கு நன்றி. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் மூலம் தினமும்  பல பேர் பயன்பெறுவார்கள் என்றும், விரைவில் இரண்டாம் வழித்தடத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
முன்னாதக செய்தியாளரிடம்  பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில்
சென்னை வண்ணாரப்பேட்டை – டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நிறைவுற்று, சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இந்த வழித்தடத்தில், இன்று முதல், மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது அனைத்து பொது மக்கள் பலன் பெறுவர்கள் .போக்குவரத்து நெரிசல் குறையும் என தெரிவித்தார. ஊழல்க்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக தான் என்று கூறினார் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here