Home News நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம்

நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம்

0
SHARE

பாஜக தலைமையிலான 5 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் விசுவரூபம் எடுத்துள்ளதாக மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

 மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர்,. ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவிட்டது எனவும்,  ஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது எனவும் சாடினார்.. மாநிலங்களுக்கு தர வேண்டிய  நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை என்ற தம்பிதுரை  இதுதான் கூட்டாட்சி தத்துவமா என்று கேள்வி எழுப்பினார். பணமதிப்பிழப்பு  நடவடிக்கையால் தமிழகத்தில் குறு, சிறு தொழில்கள் அழிந்து விட்டதாக அவர் குற்றம்சாட்டினார். பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து வினவிய தம்பிதுரை, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 6சதவீதம் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கஜா, ஓகி உட்பட 4 புயல்கள் தமிழகத்தை தாக்கி சின்னாபின்னப்படுத்திய போது மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை என புகார் தெரிவித்த தம்பிதுரை, . மத்திய அரசின் புறக்கணிப்பால் தமிழகம் பெரிய பின்னடைவை எதிர்கொண்டு வருவதாககுற்றம்சாட்டினார்.

  மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களால் எந்த பயனும் இல்லை என அவர் தெரிவித்தார். , சீனா மற்றும் வங்கதேசத்தில் இருந்து இங்கு கொண்டு வந்து குவிக்கப்படும் நுகர் பொருட்களால்  நாட்டில் சிறு தொழில்கள் வேகமாக அழிந்து வருவதாக குறிப்பிட்ட தம்பிதுரை, வெளிநாட்டு பொருட்கள் இங்கு குவிக்கப்படுவதை ஊக்குவிக்கிறீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார். தம்பிதுரையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here