Home ENTERTAINMENT CINEMA ரஜினிகாந்த் இல்லத் திருமண விழா

ரஜினிகாந்த் இல்லத் திருமண விழா

0
SHARE

நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா – விசாகன் திருமணத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், திரையுலக பிரமுகர்கள்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

.நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணம் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. பல்வேறு கட்சியின் தலைவர்கள், நடிகர்கள் திருமணத்திற்கு வருகை தந்ததால் நட்சத்திர விடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. வேதங்கள் முழங்க, இசை வாத்தியங்கள் ஒலிக்க சௌந்தர்யா – விசாகன் திருமணம் இனிதே நடைபெற்றது.

 திருமணத்தில்  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் உரையாற்றிய அவர், ரஜினிகாந்த் மற்றும் மணமகனின் தந்தையும் அவரது பெரிய தந்தையும் தனது உயிர் நண்பர்கள் எனவும் இருகுடும்பங்களும் தனக்கு வேண்டிய குடும்பங்கள் எனவும் தெரிவித்தார். மணமக்கள் 100ஆண்டுகள் கடந்து நலமோடு வாழ வாழ்த்துவதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜு, அமைச்சர் தங்கமணி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மு.க.அழகிரி, திருநாவுக்கரசர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் , மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் தனுஷ், கலைப்புலி தாணு,  கவிஞர் வைரமுத்து மற்றும் அவரின் மகன் மதன் கார்க்கி உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here