Home INFOTAINMENT EDUCATION ரோட்டரி கிளப் ஆப் கீழ்ப்பாக்கம், விருது வழங்கும் விழா

ரோட்டரி கிளப் ஆப் கீழ்ப்பாக்கம், விருது வழங்கும் விழா

0
SHARE

அக்கோர்ட் மெட்ரோபொலிட்டன் ஹோட்டலில் ரோட்டரி சங்கத்தின் ரோட்டரி கிளப் ஆப் கீழ்ப்பாக்கம், மே மாதம் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை நடத்திய விருது வழங்கல் நிகழ்வின் சிறப்பு அம்சங்கள். ரோட்டரி கிளப் ஆப் கீழ்ப்பாக்கத்தின் உறுப்பினர்களும் குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர். சங்கத்தின் தலைவர் ரோட்டெரியன் திரு சாய் வெங்கட் இந்த விழாவினில் துவக்க உரையாற்றினார் மற்றும் சங்கத்தின் செயலாளர் ரோட்டெரியன் திரு ரவி கிருஷ்ணன் நன்றி உரையாற்றினார். சங்கத்தின் தொழில்முறை சேவை இயக்குனர் ரோட்டெரியன் திரு பங்கஜ் முரார்கா இந்த விருது வழங்கல் நிகழ்சியின் திட்டமிடல் மற்றும் இயக்குதலில் முக்கிய கருவியாக இருந்தார். இந்த சங்கம் இருபத்தி ஓராம் ஆண்டின் இயக்கத்தினை கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்பது இந்த சங்கத்தின் சிறப்பாம்சம்.

ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரியும், தற்போது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தின் (RERA) தலைவராக பங்கு வகிக்கும் திரு கே ஞானதேசிகன் சிறப்பு விருந்தினராக வந்திருந்து விருதுகளை வழங்கி கௌரவித்தார். அவர் உரையாற்றுகையில் சமூகத்தில் வெற்றி பெற்றவர்களை அங்கீகரிப்பதன் மூலம் இனிவரும் தலைமுறையினரை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவது மிகவும் அவசியமானது என்று உரையாற்றினார்.

புகழ்பெற்ற கல்வியாளரும், பத்மஸ்ரீ விருது பெற்ற பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி குழுமத்தின் நிர்வாகி திருமதி வை ஜி பார்த்தசாரதி அவர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது . அவர் உரையாற்றுகையில் “நம் குழந்தைகளுக்கு பொறுப்புடமையையும், பொறுப்புணர்வையும், நேர்மையையும் கற்றுக் கொடுத்தால் மாத்திரமே ஒரு தலைசிறந்த தேசத்தை கட்டியெழுப்ப முடியும் என்று கூறினார்”.

சிறந்த தொழிலதிபரும், ஜெம் நிறுவனங்களின் குழுவின் தலைவருமான திரு ஆர் வீரமணி அவர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது . அவர் உரையாற்றுகையில் “ தொழில் முனைஓரை உற்சாக படுத்த வேண்டுமென்று கேட்டு கொண்டார்”.

அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபலமான டென்னிஸ் விளையாட்டு வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் அவர்களுக்கு தொழில்முறை சிறந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவர் உரையாற்றுகையில் “விளையாட்டு என்பது எந்த நாட்டின் கலாச்சாரமாக இருக்கிறதோ அந்த நாட்டில் மக்கள் ஆரோக்கியமாகவும் மனநிறைவுடனும் வாழ்வார்கள் என்று ஆய்வுகள் கூறுவதாகவும் நம் நாட்டில் விளையாட்டை நம் கலாச்சாரமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்”.

கலைமாமணி விருது பெற்ற பிரபலமான கலா பிரதர்சீனியின் நிறுவனர் மற்றும் நிர்வாகி திருமதி பார்வதி ரவி கண்டசாலா அவர்களுக்கு தொழில்முறை சிறந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவர் உரையாற்றுகையில் “தன்னுடைய கலை ஆர்வமே தன் வாழ்வின் ஊக்கமாய் இருந்தது என கூறியதோடு இளைஞர்களை கல்வியுடன் சேர்த்து கலைத் துறையிலும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here