Home News கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

0
SHARE

சர்ச்சைக்குரிய வகையில் கமல்ஹாசன் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது  இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து, பள்ளப்பட்டியில் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார்.அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து எனவும் அவர்தான் நாதுராம் கோட்சே” என்றும் பேசினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசனின் கருத்துக்கு பாஜக, அ.தி.மு.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில், பாஜகவைச்சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தபோது  தமிழகத்தில் கமல்ஹாசன் பேசியதற்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இதனிடையே அரவக்குறிச்சி உள்ளிட்ட 13  காவல் நிலையங்களில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் கமல்ஹாசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here