Home News கமல்ஹாசனின் தேர்தல் பிரச்சாரத்தை தடை செய்ய வேண்டும்

கமல்ஹாசனின் தேர்தல் பிரச்சாரத்தை தடை செய்ய வேண்டும்

0
SHARE

இந்துக்களை தீவிரவாதிகள் என்று பேசிய நடிகர் கமல்ஹாசனின் தேர்தல் பிரச்சாரத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பிரதமர்காப்பீடு திட்டமும், முதல்வரின் காப்பீடு திட்டமும் அனைவருக்கும் பலனுள்ளதாக,அமைந்துள்ளதாகவும் இந்த இருதிட்டங்களில் தமிழகத்தில் மட்டும் ஒருகோடியே 75லட்சம் பேர் பயனடைய தகுதி பெற்றுள்ளனர் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எந்த மதமும் தீவரவாதத்தை ஆதரிப்பது இல்லை எனவும்  ஆனால் நடிகர் கமலஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என்று பேசியதற்கு அரசியல்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப்பது கவலையாக உள்ளது எனவும் தெரிவித்தார். சந்திரசேகரராவ் சந்திபிற்கு பிறகு அவர்களுடைய நிலைபாட்டை திமுக தெரிவிக்காதது ஏன் என்று அவர்  கேள்வி எழுப்பினார். மேலும், கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் இதை பேசவேண்டிய அவசியமில்லை எனவும்,  எனவே அவரின் தேர்தல் பிரச்சாரத்தை தடைசெய்ய வேண்டும் என்றும் கூறிய அவர்  கமல்ஹாசன் தனது கருத்துகளை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here