Home News தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடி

தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடி

0
SHARE

ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து, பேசிய  கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து எனவும் அவர்தான் நாதுராம் கோட்சே” என்றும்  பேசினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள  இந்த சூழலில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த  பிரதமர் மோடி  ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது என்றார்.  உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை” என அவர் மேலும் தெரிவித்தார். .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here