Home News மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை ஸ்டாலின்

மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை ஸ்டாலின்

0
SHARE

உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல, மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்,

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மதுரை விரகனூர், கோழிமேடு உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  2 வது கட்டமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர், உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை என்று கூறினார்.  ஆட்சி மாற்றம் வந்தவுடன் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அப்போது, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை பற்றி கூறினர். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அனைத்து கோரிக்கைகளும்  நிறைவேற்றப்படும் என்று  உறுதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here