Home GALLERY ACTOR ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராவது உறுதி நகரி...

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராவது உறுதி நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா.

0
SHARE

நாளை நடைபெறக்கூடிய வாக்கு எண்ணிக்கையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராவது உறுதி நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை நகரி தொகுதி எம்எல்ஏ வும் நடிகையுமான  ரோஜா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளரிடம் பேசிய ரோஜா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாநிலப் பிரிவினையின்போது அனுபவமுள்ள முதல்வர் இருந்தால் மாநிலம் வளர்ச்சி பெறும் என மக்கள் அனைவரும் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றிபெறச் செய்து சந்திரபாபு நாயுடுவை முதல்வராக்கினார்கள். ஆனால் சந்திரபாபு நாயுடு மாநில வளர்ச்சியை ஜீரோவாகவும் அவர்கள் குடும்பமும் அவர்களின் ஹெரிட்டேஜ் நிறுவனம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டிக்கு அனுபவம் இல்லாதவர் என நினைத்து கடந்த தேர்தலில் ஏமாந்ததை போன்று இல்லாமல் இந்த தேர்தலில்  முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி அவரது தந்தையை போலவே நலத்திட்ட உதவிகளை வழங்கி மாநிலத்தை வளர்ச்சி அடைய செய்வார் என்ற நம்பிக்கையில் அவரை தற்போது நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகளை செலுத்தி வெற்றி பெற செய்ய உள்ளனர் . நாளை நடைபெறக்கூடிய வாக்கு எண்ணிக்கையில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று முதல்வராவது உறுதியாகியுள்ளது. எனவே ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றியை கொண்டாடுவதற்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரும் பொதுமக்களும்   வெற்றியை கொண்டாடுவதற்காக மும்முரமாக உள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய  சர்வே முடிவுகள் எதையும் நம்ப வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்களிடம்  யாரை கேட்டாலும் ஒரே பதில் ஜெகன்மோகன் ரெட்டி என்ற ஒரே பதில் தான்  வருகிறது .தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் சந்திரபாபு நாயுடு மகளிர்  குழுவினருக்கு மஞ்சள் – குங்குமம் என்ற பெயரில் பத்தாயிரம் ரூபாய் வழங்குவதாக கூறி மூன்று கட்டமாக காசோலைகளை வழங்கினார். மேலும் ஏற்கனவே பழைய கடன்களை ரத்து செய்யப்படும் என கூறி ஏமாற்றிய சந்திரபாபு நாயுடுவை மகளிர் சங்கத்தினர் கூட நம்ப தயாராக இல்லை. நகரி தொகுதியில் இரண்டாவது முறையாக நான் மக்களின் ஆதரவுடன் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஜெகன்மோகன் கரத்தை வலு சேர்ப்பேன் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here