Home News INDIA மோடி மீண்டும் பிரதமராக அடுத்த வாரம் பதவியேற்க உள்ளார்

மோடி மீண்டும் பிரதமராக அடுத்த வாரம் பதவியேற்க உள்ளார்

0
SHARE

மக்களவைத் தேர்தலில்  பாஜக  தனிப் அறுதிப்பெருபான்மை பெற்றதை அடுத்து மோடி மீண்டும் பிரதமராக அடுத்த வாரம் பதவியேற்க உள்ளார்.

நாடாளுமன்ற  மக்களவையில் மொத்தம் உள்ள 545 இடங்களில் 2 இடங்களுக்கு உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நேரிடையாக நியமனம் செய்வார்.  மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். அந்த வகையில்,  17-வது மக்களவையைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி பாஜக  கூட்டணி 340 தொகுதிகளில் வெற்றியை வசப்படுத்தியுள்ளது. வாரணாசி தொகுதியில்போட்டியிட்ட பிரதமர் மோடி  2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். இந்த இமாலய வெற்றியால் பாஜக தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பாஜக அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும்  மோடி . 26-ம் தேதி  ராம்நாத் கோவிந்தை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பார் என தெரிகிறது. பின்னர் பாஜக தலைமையில் புதிய அரசு அமைக்க உரிமை கோரும். மோடி மீண்டும் பிரதமராக  அடுத்த வாரம் பதவியேற்க உள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here