Home BUSINESS BJP வெற்றி பெற்றதால் இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சி

BJP வெற்றி பெற்றதால் இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சி

0
SHARE

மத்தியில் ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன.

மக்களவைத்  தேர்தலில்,  7 கட்டங்களாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. நண்பகல் நிலவரப்படி பாஜக கூட்டணி 321 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி 110 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 110 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன. ஆட்சியமைக்க தேவையான இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக கூட்டணி  முன்னிலை பெற்றிருப்பதால்

, பங்குச்சந்தைகளும் எழுச்சி பெற்றன. இன்று காலை முதலே விறுவிறுப்பாக வர்த்தகம் நடைபெற்றது. காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 886 புள்ளி 56 புள்ளிகள் உயர்ந்து 39 ஆயிரத்து 996 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 257புள்ளி 95 புள்ளிகள் உயர்ந்து, 11 ஆயிரத்து 995 புள்ளி 85 என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்றது. சுமார்ஆயிரத்து 240 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. 370 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. 68 நிறுவனங்களின் பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here