Home News ஜாதி மத உணர்வுகளுக்கு இடமளிக்காமல் வாக்களிதிருக்கிறார்கள் கனிமொழி

ஜாதி மத உணர்வுகளுக்கு இடமளிக்காமல் வாக்களிதிருக்கிறார்கள் கனிமொழி

0
SHARE

தமிழக மக்கள் ஜாதி மத உணர்வுகளுக்கு இடமளிக்காமல் வாக்களிதிருக்கிறார்கள் என திமுக மகளீர்அணி செயலாளர் கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அவர் 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்துரி இடமிருந்து பெற்று கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாடு முழுவதும் பரத்திய ஜனதா வெற்றி பெற்ற போதிலும் தமிழகம் தனித்திருப்பதை தமிழக மக்களின் முடிவு காட்டுகிறது. திமுக தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபடும் என்றார். வெற்றி பெற்றுள்ள மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினருக்கு வாழ்த்துக்கள். ஆட்சியில் உள்ளவர்களிடம் கேட்டு தமிழகத்திற்கான திட்டங்களை பெறுவோம். திமுக தலைவர் வழிகாட்டுதலின் பேரில் செயல் படுவோம் என்றார். தமிழிசையை பற்றி விமர்சனம் செய்ய இந்த நேரத்தில்  விரும்பவில்லை, அவர்கள் வெற்றி பெறாத நேரத்தில் அவரை காயப்படுத்த விரும்பவில்லை  என்றார்.
 கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் 215934 வாக்குகள் பெற்றிருந்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here