Home SPORTS விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது

விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது

0
SHARE

கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீர்ர் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில், இந்தியா முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. உலகக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று நள்ளிரவு மும்பை விமான நிலையத்தில் இங்கிலாந்து புறப்பட்டு சென்றது. தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி,கேப்டன் விராட் கோலி  தலைமையிலான இந்திய வீரர்கள் சென்றனர். இந்நிலையில், கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என  முன்னாள்கிரிக்கெட் வீர்ர் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உலகக்கோப்பையின் ஒவ்வொரு ஆட்டத்திலும் அணியில் உள்ள மற்ற வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், தனி ஒருவராக போராடினால் மட்டும் கோப்பையை வென்றுவிட முடியாது என்றும தெரிவித்தார். இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடுபவர்கள் என்றும் போட்டியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்றபடி வீரர்களை களமிறக்குவது முக்கியம் என்றும அவர் குறிப்பிட்டார் தற்போதைய சூழ்நிலையில் உலகக்கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு   இந்தியாவுக்கு அதிகமுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here