Home News அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை

0
SHARE

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்..

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுடன் ஸ்டாலின், உழைப்பாளர் சிலையில் இருந்து பேரணியாக அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்றார். அங்கு இருவர் நினைவிடங்களிலும் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் புதிதாக தேர்வான மக்களவை உறுப்பினர்கள்,  மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.

 திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் திமுகவுக்கு கிடைத்துள்ள பெரிய வெற்றி என்பதால்  வரும் ஜூலை 3-ம் தேதி நந்தனம் ஒய்என்சிஎம் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. . இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும்  இரு கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்கள், , கொங்கு நாடு முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள்பங்கேற்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here