Home News அதிகாரம் மற்றும் பணபலத்தால் தோற்கடிக்கப்பட்டேன் ஈவிகேஎஸ் இளங்கோவன்

அதிகாரம் மற்றும் பணபலத்தால் தோற்கடிக்கப்பட்டேன் ஈவிகேஎஸ் இளங்கோவன்

0
SHARE

தேனி மக்களவைத் தொகுதியில் அதிகாரம் மற்றும் பணபலத்தால் தோற்கடிக்கப்பட்டேன் என்று காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

தனது தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி என்றும் அதிகாரம், பணபலத்தால் தான் தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறினார்.  வாக்களித்த தேனி தொகுதி மக்களுக்கும்,உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்த அவர்,  தேனி தொகுதியில் தேர்தலின்போது நடைபெற்ற முறைகேடுகள் குறித்த ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறினார். வழக்கறிஞர்களுடன் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என்ற இளங்கோவன்  பல மின்னணு இயந்திரங்களில் சீல் இல்லை எனபதை சுட்டிக் காட்டினார். தேனி மாவட்டத்தில் விவிபேட் வாக்குகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று வலியுறுத்திய அவர்,  வட மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாததே காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்றார்.தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்ததைப் போல்வடமாநிலங்களில் அமையவில்லை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்ற தமிழக பாஜகவினர் மீது மோடிக்கு இல்லாத காதல் ஓ.பன்னீர் செல்வத்தின்மீது மட்டும் வந்திருப்பது ஏன் என்று இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here