Home News ஒடுக்கப்பட்டவர்கள் மீதான தாக்குதல் துவங்கிவிட்டது

ஒடுக்கப்பட்டவர்கள் மீதான தாக்குதல் துவங்கிவிட்டது

0
SHARE

மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ள நிலையில், ஒடுக்கப்பட்டவர்கள் மீதான தாக்குதல் தொடங்கி விட்டதாக விடுதைலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்  திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் 43 நாட்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். இந்த தேர்தலில் வேலூர் நீங்கலாக 39 மக்களவைத் தொகுதிகளிலும், 13 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து  மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை திமுக கூட்டணி வேட்பாளர்கள் கடந்த 2 நாட்களாக நேரில் சந்தித்து  வாழ்த்து பெற்று வருகின்றனர். இந்நிலையில்  மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ள நிலையில், ஒடுக்கப்பட்டவர்கள் மீதான தாக்குதல் தொடங்கி விட்டதாக தெரிவித்தார். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசாக இந்த அரசு அமைந்து விடக் கூடாது என்று வைகோ கூறியிருப்பதை திருமாவளவன் சுட்டிக்காட்டினார்.

இதனை தொடர்ந்து பேசிய வைகோ,  திருமாவளவனின் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இன்னல்கள் அவருக்கு கொடுக்கப்பட்டாலும் அதையும் தாண்டி அவர் மாபெரும் வெற்றியைப் பெற்றிருப்பதாக தெரிவித்தார். திருமாவளவன்,  ரவிக்குமார் ஆகியோர்நாடாளுமன்றத்திற்கு பணியாற்ற செல்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும், அவர்களுக்கு மதிமுக சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாகவும் வைகோ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here