Home News கட்சி முகவர்களின் வாக்குகள் ஒன்றுகூட பதிவாகத்து ஏன் டிடிவி தினகரன் கேள்வி

கட்சி முகவர்களின் வாக்குகள் ஒன்றுகூட பதிவாகத்து ஏன் டிடிவி தினகரன் கேள்வி

0
SHARE

பல்வேறு தொகுதிகளில் தங்கள் கட்சி முகவர்களின் வாக்குகள் ஒன்றுகூட பதிவாகத்து ஏன் என்று தேர்தல் ஆணையத்திற்கு அ.ம.மு.க. பொது செயலாளர் டிடிவி தினகரன் கேள்விஎழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் எதிர்பார்த்த  வெற்றி கிடைக்காதபோதிலும் மக்கள் வழங்கியதீர்ப்பை ஏற்பதாக தெரிவித்தார். சுமார் 300 வாக்குச்சாவடிகளில் அ.ம.மு.க.விற்கு பூஜ்ஜிய வாக்குகளே பதிவாகி இருப்பதை சுட்டிக் காட்டிய அவர், . அ.ம.மு.க. முகவர்களின் வாக்குகள்கூட பதிவாகாமல் போனதற்கு தேர்தல் ஆணையம் தான் பதில்கூற வேண்டும் என்றார். தேர்தல் தோல்வி குறித்து ஆராய வேண்டிய அவசியம் இல்லை என்றும்,  எதிர்காலத்தில்வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here