Home SPORTS இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

0
SHARE

தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து311 ரன்களை எடுத்தது.  

இதனையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள், இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறினர்.

இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 39.5 ஓவர்முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here