Home News நீட் தேர்விற்கு காரணமே திமுக, காங்கிரஸ் தான் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

நீட் தேர்விற்கு காரணமே திமுக, காங்கிரஸ் தான் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

0
SHARE

நீட் விவகாரத்தில் தூங்குவது போல நடிக்கும் திமுகவை எழுப்ப முடியாது என்றும், நீட் தேர்விற்கு காரணமே திமுக, காங்கிரஸ் தான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை எழும்பூர் உள்ள இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 262வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, இந்தியாவிலேயே ஆங்கியலேயர்களை எதிர்த்த முதல் சுதந்தர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் என்று கூறினார்.
நீட் தொடர்பான கேள்விக்கு, நீட் விவகாரத்தில் தூங்குவது போல நடிக்கும் திமுகவை எழுப்ப முடியாது என்றும், நீட் தேர்விற்கு காரணமே திமுக, காங்கிரஸ் தான் என்றும் கூறினார். மேலும் திமுக ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் தாரை வார்க்கப்பட்டது என்ற அவர், இழந்த உரிமைகளை அதிமுக அரசு மீட்டு வருகிறது எனக் கூறினார். அதுமட்டுமின்றி டெல்லிக்கு பாதபூஜை செய்து குடும்பத்திற்காக பதவியை பெற்றது திமுக என்று குற்றச்சாட்டினார்.

அதன் பின் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறும்போது, 
அண்ணா நூற்றாண்டு வளாகத்தில் கழிவறைகள் உரிய முறையில் பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. திமுக ஆட்சியில் கொண்டு வந்ததால் அதிமுக சரியாக பராமரிக்கவில்லையா என்ற கேள்விக்கு, திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்பதால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிப்பதில் பாரபட்சம் காட்டவில்லை என்று கூறினார்.
மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து சிறப்பாக பராமரிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here