Home News INDIA நீட் தேர்வை வைத்து தமிழக கட்சிகள் அரசியல் குற்றஞ்சாட்டிய தமிழிசை

நீட் தேர்வை வைத்து தமிழக கட்சிகள் அரசியல் குற்றஞ்சாட்டிய தமிழிசை

0
SHARE

நீட் தேர்வை வைத்து தமிழக கட்சிகள் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டிய பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மக்களும் மாணவர்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை எழும்பூர் உள்ள இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 262வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறும்போது, அழகு முத்துக்கோனுக்கு மரியாதை செய்வதில் பாஜக பெருமை கொள்கிறது. மேலும் அழகு முத்துக்கோனுக்கு தபால்தலை வெளியிட்டு பெருமைப்படுத்தியது பாஜக அரசு என்று கூறினார்.
நீட் மசோதா குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தெளிவாக விளக்கியிருக்கிறார் என்றார். எனவே நீட் தேர்வை வைத்து தமிழக கட்சிகள் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டிய தமிழிசை, மக்களும் மாணவர்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here