
அரசியலில் உச்சம் தொடர்வதற்கு, பிரதானமாக
தேவைப்படுவது- பின்னணி.
இந்திய அரசியல் அரங்கில் இன்றைய தினம் முதல்-
அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், கட்சியின் தலைவர்
என உயர் பொறுப்புகளில் ஜொலிக்கும் பத்து பேரை
எடுத்துக்கொண்டால், பத்து பேருக்கும் கனமான
பின்னணி உண்டு.
வடக்கே காஷ்மீரில் இருந்து வாரிசுகளை
வரிசைப்படுத்தினால், இந்த உண்மைகள் ‘பளிச்சென’
புலப்படும்.
ஜம்மு-காஷ்மீரில் இரு பெரும் தலைவர்களாக
விளங்கும் உமர் அப்துல்லா, மகஃபூபா முப்தி ஆகிய
இருவரின் தந்தையும் முதல்- அமைச்சர்களாக
கோலோச்சியவர்கள்.
டெல்லியிலும் கூட இவர்களின் சொல்லுக்கு, தனி
செல்வாக்கு இருந்தது.
மகாராஷ்டிர மாநில முதல்-அமைச்சர் உத்தவ்
தாக்கரேயின் பின்னணி நாடறியும்.
பயமோ, பாசமோ? தெரியவில்லை.
உத்தவ் தந்தை பால் தாக்கரே, மகாராஷ்டிராவை
தனது கைப்பிடிக்குள் வைத்திருந்தார்.
இந்தியாவின் மத்திய பகுதிக்கு வருவோம்.
உத்தரபிரதேசத்தின் அகிலேஷ் யாதவ், பீகாரின்
தேஜஸ்வி யாதவ், ஒடிசாவின் நவீன் பட்நாயக்
போன்ற இன்றைய இளம் தலைமுறையினருக்கு
அவர்களின் அப்பாக்கள், ராஜபாட்டை விரித்து
வைத்திருந்தார்கள்.
சோனியா காந்தியால் கேள்வி கேட்க முடியாத
ராஜசேகர ரெட்டியின் மகனான ஆந்திர முதல்வர்
ஜெகன் மோகன் ரெட்டி, இந்திராவுக்கு சிம்ம
சொப்பனமாக திகழ்ந்த என்.டி.ராமராவின் மருமகன்
சந்திரபாபு நாயுடு போன்றோர், அண்டை மாநில
உதாரணங்கள்.
நம்ம ஊர்க்காரர்கள் மு.க. ஸ்டாலின், அன்புமணி
ராமதாஸ், ஜி.கே.வாசன் போன்றோர் குறித்து தனி
விவரம் தேவை இல்லை.
ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னணி என்ன?
உண்மையும், உழைப்பும் மட்டுமே.
தந்தை ஓட்டக்காரத்தேவர் , பெரியகுளத்தில் மிக
சாதாரண விவசாயி.
‘’ தந்தை மகற்காற்று நன்றி அவைத்து
முந்தி இருப்பச்செயல்’’
என்ற வள்ளுவன் வாக்கை மனதில் நிறுத்தி
வைத்திருந்த தேனி மாவட்ட தேவரால்,
ஓ.பன்னீர்செல்வத்தை, தனது சக்திக்கு ஏற்ப படிக்க
வைக்க முடிந்தது.
உத்தமபாளையம் ‘ ஹாஜி கருத்த ராவுத்தர்
ஹவுடியா’ கல்லூரியில் பி.ஏ. படித்த ஓ.பி.எஸ்.
தேநீர் கடை ஆரம்பித்து, ஓய்வறியா தேனீ
போல்,தனது உழைப்பை மக்களுக்காகவும்,
கட்சிக்காகவும் முதலீடு செய்தார்.
18 வயது ஓ.பி.எஸ். தனது அரசியல் பயணத்தை,
எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்த போது
தொடங்கினார்.
தலைவர் அ.தி.மு.க.வை தொடங்கியபோது,
ஓ.பி.எஸ்.சும் அவரை பின் தொடர்ந்தார்.
துளித்துளியாய் எம்.ஜி.ஆர். இயக்கத்துக்கு ஒவ்வொரு
ஓட்டாக சேகரிக்கும் ’பூத்’ கமிட்டி தொண்டனாக
துளிர் விட்ட ஓ.பி.எஸ்.அரசியல் வாழ்க்கை.
விருட்சிகமாய் வளர்ந்து நிற்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய விழுதுகளை பற்றி
அவரே முழம் முழமாய் ஏறினார்.
சக தோழர்களை தோளில் ஏற்றி சுமந்தாரே அன்றி,
யாரும் தோளிலும் ஏறவில்லை.
பெரியகுளம் நகரசபை தலைவர், சட்டமன்ற
உறுப்பினர், அமைச்சர், என ஒவ்வொரு படியாக
உயர்ந்தார்.
தமிழகத்தின் உச்சபட்ச அதிகார பதவியான முதல்-
அமைச்சர் நாற்காலியிலும் அமர்ந்தார்.
உழைப்புக்கும், விசுவாசத்துக்கும் கிடைத்த
வெகுமதிகள் அவை.
அம்மா வழங்கிய, சன்மானம்.
களம் கண்ட அனைத்து தேர்தலிலும் வாகை
சூடினார்.
2011 மற்றும் 2016 ஆகிய இரு ஆண்டுகளில்
பெரியகுளம் தொகுதியில் நின்றார். வென்றார்.
2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு தேர்தல்களில்
போடிநாயக்கனூரில் போட்டியிட்டு ஜெயித்தார்.
நான்கு முறையும் ஓ.பி.எஸ். சுமார் 50% வாக்குகளை
அதாவது பதிவான வாக்குகளில் பாதி வாக்குகளை
அள்ளினார், என்பது வரலாறு. எஞ்சிய ஓட்டுகளை
எதிரிகள் பங்கு பிரித்துக்கொண்டார்கள்.
நான்கு முறையும் பலம் வாய்ந்த
தி.மு.க.வேட்பாளர்களை பந்தாடினார் என்கிறது,
தேர்தல் ஆணையத்தின் பதிவு.
More Stories
தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்
The first 10 All New Nissan Magnite cars in Chennai rolled out from Autorelli Nissan!
Ajinomoto (MSG) is a quality product prepared with natural ingredients