Fri. Jul 30th, 2021

News Broadcasting Agency

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில்,  இயக்குநர், தயாரிப்பாளர் R.கண்ணன் இயக்கத்தில்  உருவாகும் கிளாசிக் காமெடி படமான,   “காசே தான் கடவுளடா”  

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில்,  இயக்குநர், தயாரிப்பாளர் R.கண்ணன் இயக்கத்தில்  உருவாகும் கிளாசிக் காமெடி படமான,   “காசே தான் கடவுளடா”  படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது !
இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும், தமிழின் எவர்கிரீன் காமெடி படமான “காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு, இன்று ( 2021 ஜூலை 16) திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது.

இப்படத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாப்பாத்திரத்திலும், அவரது காதலியாக பிரியா ஆனந்த் அவர்களும் நடிக்கிறார்கள். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி  ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ஊர்வசி
 கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா  உட்பட மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். கண்ணன் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

July 2021
S M T W T F S
« Jun    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031