Sun. Oct 25th, 2020

News Broadcasting Agency

ரசிகர்களின் பாராட்டு மழையில் க பெ ரணசிங்கம்

நடிகர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெளிநாட்டில் இறந்துபோன கணவனின் உடலை மீட்டு, தாயகம் கொண்டுவரப் போராடும் சாமானியப் பெண்ணின் கண்ணீர்க் கதை க/பெ. ரணசிங்கம்.

இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்த தங்களின் விமர்சனங்களை டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி தள்ளியுள்ளனர். கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றும் அவரது நடிப்புத் திறமையை பேச இந்த ஒரு படமே போதும் என்றும் புகழ்ந்துள்ளனர் ரசிகர்கள். அதன்படி படத்தை பார்த்த இந்த ரசிகர், அறம் படத்திற்கு பின்னர் படம் பார்த்த பிறகு கண்களில் கண்ணீர் வரவழைக்கும் மிக மிக தரமான திரைப்படம் சமூக அக்கறை கொண்ட படங்களை மக்களுக்கு கொடுக்கும் விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்கள்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன். மற்றொரு ரசிகரான இவர், கபெ ரணசிங்கம்.. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதியின் எக்ஸெலென்ட் பர்ஃபார்மன்ஸ்.. மொத்த படக்குழுவுக்கும் பாராட்டு என்று கூறியுள்ளார். பிலிமி அப்டேட்ஸ் பதிவிட்டுள்ள டிவிட்டில் கபெ ரணசிங்கம் வெளிநாட்டிலிருந்து ஒரு சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு தொழிலாளர்கள் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சிரமங்களை இரண்டாவது பாதியில் ஏராளமான உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் சக்திவாய்ந்த டயலாக்குகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷின், கனவு பாத்திரம் அற்புதமான பர்ஃபாமன்ஸுடன் ஈர்க்கிறது என தெரிவித்துள்ளது. மற்றொரு நெட்டிசனான இவர், கபெ ரணசிங்கம்.. கண்ணீர் ஒன்னுதான்… அது சந்தோஷத்துக்கா சங்கடத்துக்கான்னு நாம தான் முடிவு பண்ணனும் என தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இது தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்தால் 100% ஃபேமிலி ஆடியன்ஸைக் கொண்டு ஹவுஸ்ஃபுல் ஷோவாக இருந்திருக்கும்.

ஆனால், பெரிய திரைகளில் அதைக் காணவில்லை. இயக்குநருக்கு வாழ்த்துக்கள், இத்தகைய வலுவான தைரியமான முயற்சிக்கு. ஐஸ்வர்யா ராஜேஷ் முற்றிலும் அற்புதமான நடிப்பு, அதிர்ச்சியூட்டும் சொல்லப்படாத ஒரு கதை. மிகவும் நல்ல படம் என பாராட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான இவர், சமீபத்திய OTT வெளியீடுகள் பொறுமையை சோதித்த பிறகு கபெ ரணசிங்கம் ஒரு மீட்பராக வந்துள்ளார்.. கடுமையாகத் தாக்கும் படம்.ஐஸ்வர்யா ராஜேஷ் முழு படத்தையும் சுமந்துள்ளார்.ஜிப்ரான் இசை அற்புதம். விஜய் சேதுபதி படத்திற்கு ஒரு பெரிய சப்போர்ட். இது தியேட்டரில் வெளியிடப்பட்டிருந்தால் இன்னும் அதிகமாக அனுபவித்திருக்கலாம் என கூறியிருக்கிறார்.”