Fri. Jul 30th, 2021

News Broadcasting Agency

31 நிமிடம் தலையில் தக்காளி வைத்து பத்மாசனம் யோகா செய்து உலக சாதனை

சேலம் மாவட்டம் ஆத்தூர்  தேவியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் – சுதா தம்பதியினர். இவர்களது மகள் தர்ஷிகா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவயதிலிருந்தே யோகா மீது ஆர்வம் கொண்ட இவர்  ஊரடங்கு காலத்தில் பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்த  மாணவி தர்ஷிகா  தொடர்ந்து யோகா பயிற்சி ஈடுபட்டுள்ளார். மேலும் யோகாவில் சாதிக்கும் எண்ணம் கொண்ட மாணவி தர்ஷிகா திருச்சியை சேர்ந்த பதஞ்சலி கிருஷ்ணகுமார் குருஜி அவர்களின் பயிற்சியில்  தலையில் தக்காளிப் பழத்தை வைத்து பத்மாசன யோகாசன பயிற்சியை மேற்கொண்டு வந்தார் இந்த நிலையில் குரானாவின் மூன்றாவது  அலை  குழந்தைகளைத் தாக்கும் இதிலிருந்து குழந்தைகள் சிறுவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள யோகா அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாணவி தர்சிகா பத்மாசனம் யோகாசனம் செய்து உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவி தர்சிகா தலையில் தக்காளி பழம் வைத்து பத்மாசனம் யோகாசனத்தை  31 நிமிடம் அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். மாணவியின் இந்த சாதனையை சேலம் மாநகர காவல் துறையில் துணை ஆணையாளர் வேதரத்தினம் பாராட்டினார். பின்னர் மாணவியின் இந்த சாதனையை பதஞ்சளி புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்டுஸ் அமைப்பு அங்கீகரித்து உலக சாதனைக்கான கேடயம் மற்றும் சான்றிதழ்களை திருச்சியை சேர்ந்த பதஞ்சலி குருஜி கிருஷ்ணகுமார் வழங்கி பாராட்டினர். 

 இந்த உலக சாதனை குறித்து மாணவி தர்ஷிகா  செய்தியாளர்களிடம் கூறும்பொழுது குரானா மூன்றாவது ஆலையில் இருந்து குழந்தைகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள யோகாசனம் செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த உலக சாதனையை படைத்துள்ளேன் என்றும் கூறினார் மேலும் இந்த யோகாசனம் செய்வதன் மூலம்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மூச்சுத்திணறல் பிரச்சினை படாமல் இருக்கும் அனைவரும் யோகா செய்ய வேண்டும் என வலியுறுத்திய சாமி படைத்தேன் என்று கூறினார்

   இந்த உலக சாதனை குறித்து யோகாசன பயிற்சியாளர் குருஜி கிருஷ்ணகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது பள்ளி குழந்தைகளிடையே யோகாசன ஆர்வத்தை தூண்டும் விதத்திலும் குரானா மூன்றாவது அறையிலிருந்து குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பதாஞ்சலி வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் இந்த உலக சாதனை நிகழ்வு நடத்தியதாக கூறினார் ஏற்கனவே வாழைப்பழத்தை தலையில் வைத்து 20 நிமிடம் சாதனையாக இருந்ததை இந்த மாணவி முடிவெடுத்து முப்பத்தி ஒரு நிமிடம் தலையில் தக்காளி பழம் வைத்து பத்மாசன யோகாசனத்தை செய்துள்ளார் சிறுவர்கள் யோகா செய்வதால் மன அழுத்தம் குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து மன அழுத்தம் இல்லாமல் நன்றாக படிக்க இந்த யோகா முறைகள் உதவுவதாக தெரிவித்தார். 

July 2021
S M T W T F S
« Jun    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031