முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இலவச அரிசி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கப்படும், என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சட்டசபையில் அறிவித்தார். இது குறித்து சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசுகையில், “இலங்கை தமிழர்களுக்கு ரே‌ஷன் கடைகளில் விலையில்லா அரிசி வழங்கப்படும். ஆண்டுதோறும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி வழங்கப்படும். கல்விக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாம்களில் […]

Continue Reading

ஆசிரியர்களின் குடும்ப நபர்களுக்கு முன்னுரிமை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அதேபோல், ஆசிரியர்களின் குடும்ப நபர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும், என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக நேற்று 5.72 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும், இந்தியாவிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் அவர் தெரிவித்தார்.

Continue Reading

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கடந்த அதிமுக ஆட்சியால் விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து சட்டமன்றத்திற்கு வெளியே பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழக முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சியை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். தமிழகத்தில் பள்ளிகளை தரம் உயர்த்தி, கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியவர் ஜெயலலிதா. அதன் மூலம்தான் […]

Continue Reading

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி! – கூட்டணி குறித்து கமல்ஹாசன் விளக்கம்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டது. ஆனால், இதில் ஒரு தொகுதியில் கூட்ட அக்கட்சி வெற்றி பெறவில்லை. அதே சமயம், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மட்டும் வெற்றியின் மிக அருகில் சென்று தோல்வியடைந்தார். இதற்கிடையே, தேர்தல் முடிவுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து வெளியேறியதால், கட்சியின் கட்டமைப்பில் சில […]

Continue Reading

கொரோனாவுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் நோவா பல்கலைக்கழகத்தின் அங்கமான ரசாயன மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவை குணப்படுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர். 3 மருந்துகளின் கலவையான இம்மருந்து, கொரோனா நகலெடுப்பை குறைக்கும் என்று கூறுகின்றனர். மேலும், இந்த மருந்துகளால் வைரஸ் நகலெடுப்பது 50 சதவீதம் மட்டுமே நடந்தள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள், வைரஸ் செயல்பாட்டை குறைக்க ‘என்எஸ்பி 14’ என்ற வைரஸ் புரதத்தில் இந்த மருந்துகளின் கலவை செயல்படும் என்றும், கொரோனாவால் […]

Continue Reading

ஆச்சரியமான தகவல், ஆனால் உண்மை – ரூ.87-க்கு வீடு விற்பனை!

சொந்த வீடு என்பது அனைத்து மக்களின் பெரும் கனவுகளில் ஒன்று. ஆனால், இந்த கனவு பலருக்கு வெறும் கனவாகவே இருந்து விடுகிறது. காரணம், நம் நாட்டில் வீடு அல்லது நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்றால், பல லட்சங்கள் செலவாகும். ஆனால், ஒரு நாட்டில் வெறும் ரூ.87-க்கு வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தகவல் மிக ஆச்சரியமாக இருந்தாலும், உண்மை. ஆம், இத்தாலி நாட்டில் ஒரு வீடு வாங்க வெறும் ரூ.87 இருந்தால் போதும். இத்தாலியின் […]

Continue Reading

கலைஞர் நூலகம் பற்றி தவறான பரப்புரை – முதலமைச்சர் விளக்கம்

முதுரையில் அமைய இருக்கும் கலைஞர் நூலகம், பென்னிகுயிக் நினைவிடத்தை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் கட்டப்பட இருப்பதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே.ராஜு சட்டமன்றத்தில் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அது குறித்து விளக்கம் அளித்தார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முன்னாள் அமைச்சர் திரு.செல்லூர் ராஜு அவர்கள், பென்னிகுயிக் நினைவிடத்தினை மாற்றி, அப்புறப்படுத்தி, அந்த இடத்திலே கலைஞர் பெயராலே அமையவிருக்கக்கூடிய நூலகம் கட்டப்படவிருக்கிறது என்ற […]

Continue Reading

கொரோனா தடுப்பூசியால் தான் விவேக் உயிரிழந்தார்! – விசாரணை நடத்தும் மனித உரிமை ஆணையம்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த விவேக், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டாவது நாளில் திடீரென்று மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 17 அம தேதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் நடிகர் விவேக் உயிரிழந்ததாக தகவல் பரவியதால் பொதுமக்களும், திரைத்துறையினரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், பிரேத பரிசோதனை நடிகர் விவேக், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாகவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, விழுப்புரத்தை […]

Continue Reading

விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று (ஆக.25) தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”தே.மு.தி.க. நிறுவனரும், தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்த நாளில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

கொடநாடு வழக்கு – சயான் வாக்குமூலம் 27 ஆம் தேதி ஊட்டி நீதிமன்றத்தில் தாக்கல்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை திரட்டுவதற்காக போலீசார் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான், நிபந்தனை ஜாமீனில் ஊட்டியில் தங்கியிருக்கிறார். அவரை மறுவிசாரணைக்காக ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து சயான் கடந்த […]

Continue Reading

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக வேண்டும் – நீதிபதி உத்தரவு

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ-மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே அவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி அலீசியா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் […]

Continue Reading

கைதாவரா கே.டி.ராகவன்! – ஜோதிமணியின் அதிரடி நடவடிக்கை

தமிழக பா.ஜ.க-வின் பொதுச்செயலாளராக பதவி வகித்த கே.டி.ராகவன், தொடர்பான பாலியல் வீடியோ ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து பதவியை ராஜினாமா செய்துள்ள கே.டி.ராகவன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, சட்ட ரீதியாகவும் சந்திப்பேன், என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கே.டி.ராகவனை கைது செய்து முறையாக விசாரணை நடத்த வேண்டும், என வலியுறுத்தி கரூர் மாவட்ட காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, தமிழக காவல்துறை தலைவரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.

Continue Reading

சென்னையில் லேசான நிலஅதிர்வு!

வங்ககடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னியில் சில பகுதிகளில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்ககடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 12.39 மணிக்கு சென்னை கடலோர பகுதிகளான திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வால் சேதங்கள் எதாவது ஏற்பட்டதா? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Continue Reading

புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, சென்னை அருகே உள்ள தாம்பரம் உள்ளிட்ட தமிழகத்தில் 6 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார். தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி அமைக்கப்படுகிறது. காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர் உள்பட […]

Continue Reading

பாலியல் புகாரில் சிக்கிய கே.டி.ராகவன்! – பதவியை ராஜினாமா செய்தார்

தமிழக பா.ஜ.க-வின் பொதுச்செயலாளராக இருக்கும் கே.டி.ராகவன், பாலியல் புகாரில் சிக்கியதை தொடர்ந்து தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார். கே.டி.ராகவனை பற்றி சமூக வலைதளத்தில் பாலியல் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீடியோவை வெளியிட்டவர் பா.ஜனதாவில் பல ஆண்டுகளாகவே பாலியல் சீண்டல்கள் நடப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க தயங்கியும், முக்கிய நிர்வாகிகள் என்பதால் அவர்களின் மிரட்டலுக்கு பயந்து இருப்பதாகவும், இதே போல் மேலும் சிலரது […]

Continue Reading

சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்லும் விஜயகாந்த்

தனது பிறந்தநாளையொட்டி தேமுதிக-வினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ள விஜயகாந்த், விரைவில் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2005-ம் ஆண்டு தே.மு.தி.க. தொடங்கப்பட்ட பின்னர் 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறோம். ‘இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே’ என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கான பல உதவிகளை செய்து வருகிறோம். தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் தற்போதுதான் குறைந்து வரும் நிலையில், […]

Continue Reading

மெரினா கடலில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணி தீவிரம்

சென்னை மெரினா கடற்கரையில் குளிக்க சென்று காணாமல் போன 12ம் வகுப்பு மாணவர்கள் 3 பேரை இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 4 மாதங்களுகு பிறகு சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகள் மக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று நூற்றுக்கணக்கானோர் மெரினா கடற்கரையில் திரண்டனர். அப்போது மெரினா கடற்கரைக்கு வந்த 12ம் வகுப்பு மாணவர்கள் 6 பேரில் 3 பேர் கடலில் இறங்கி குளித்தனர். கடலில் ஆழ பகுதிக்கு அவர்கள் […]

Continue Reading

ரூ.39 கோடி செலவில் கருணாநிதிக்கு நினைவிடம் – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்த கருணாநிதிக்கு சென்னையில் நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்தார். மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில் கட்டப்பட உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில், வருடைய வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களும் இடம்பெற இருப்பதாகவும் தெரிவித்தார்.

Continue Reading

சட்டபேரவையில் கருணாநிதியை புகழ்ந்த ஓ.பன்னீர் செல்வம்

தமிழக சட்டசபையில் துறை ரீதியிலான மானியத்தின் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மறைந்த மு.கருணாநிதியை புகழ்ந்துள்ளார். இது குறித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “சமுதாயத்தை சீர் திருத்தும் கருத்துகள் அடங்கியது தான் கருணாநிதியின் எழுத்துக்களால் உருவான பராசக்தி படம். என் தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர்.” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

இந்தியாவில் அக்டோபர் மாதம் கொரோனா 3 வது அலை உச்சமடையும்! – நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், கேரளா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவை மூன்றாவது அலை தாக்குவதை தவிர்க்க முடியாது, என்று எச்சரித்துள்ள நிபுணர்கள் அக்டோபர் மாதம் மூன்றாவது அலை உச்சமடைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் சிறிது சிறிதாக அதிகமாகி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நிபுணர் குழு, கொரோனா 2ம் அலையின் தாக்கத்தில் பாதியளவேனும் 3ம் அலையில் இருக்கக் கூடும் என்று கணித்திருப்பதோடு, […]

Continue Reading