பிறந்த நாள் கொண்டாட்டமாக, ஜனவரி 27 முதல், சமூக தலைப்புகளில் ரசிகர்களுடன் நேரலை நிகழ்வுகளில் பங்கேற்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்

தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார், அவரது பிறந்தநாளை ஒட்டி, இந்த மாதம் முழுவதுமே அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க,  ஸ்ருதிஹாசனின் சமூக வலைத்தள பக்கத்தை, தொடர்ந்து பல நாட்களாக அழைப்புகள் மற்றும் வாழ்த்து குறுஞ்செய்திகளால்  ரசிகர்கள் மூழ்கடித்துவிட்டனர். அனைத்து ரசிகர்களின்  பொங்கி வழியும் அன்பில் மூழ்கிதிளைக்கும்  நடிகை ஸ்ருதிஹாசன், ஒவ்வொரு ரசிகருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க முயன்று வருகிறார். மேலும் […]

Continue Reading

ஜீ5 தளத்தில் வெளியாகும் “முதல் நீ முடிவும் நீ” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

தமிழ் ரசிகர்களின் விருப்பமான தளமாக, தொடர் வெற்றிப் படங்களை தந்து வரும் ஜீ5 தளத்தில், அடுத்த  வெளியீடாக ஜனவரி 21, 2022 அன்று “முதல் நீ முடிவும் நீ”  திரைப்படம் வெளியாகிறது.இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் தமிழ்நாட்டின் சென்னையில் 90களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை மையமாகக் கொண்டு ஜனரஞ்சகமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் திரை முன்னோட்டம் திரைப்பட குழுவினர் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் […]

Continue Reading

புத்தம் புது காலை விடியாதா.. முதல் பாகத்தைவிட எப்படி மாறுப்பட்டு நிற்கிறது! இயக்குநர் பாலாஜி மோகன்

அமேசான் ஒரிஜினல் சீரிஸ், புத்தம் புது காலை விடியாதா.. முதல் பாகத்தைவிட எப்படி மாறுப்பட்டு நிற்கிறது என்பது குறித்து இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார். அமேசான் ஒரினிஜினல்ஸ் அண்மையில் 5 பாகங்கள் கொண்ட அந்தாலஜியை வெளியிட்டது. இந்த அந்தாலஜி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.காதல், நம்பிக்கை, புதிய துவக்கங்கள் என வாழ்க்கையின் உணர்வுகளை தனக்கே உரித்தான பாணியில் பாலாஜி மோகன் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளனர். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் […]

Continue Reading

“மைக்கேல்” படத்தில் இணைந்த நடிகை வரலட்சுமி சரத்குமார்

சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவன தயாரிப்பில் உருவாகும், பன்மொழி இந்திய படமான “மைக்கேல்” படத்தில் இணைந்திருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற தனித்துவமான நட்சத்திரமாக அறியப்படுபவர் நடிகர் சந்தீப், அவரது சிறப்புமிக்க திரைக்கதை தேர்வுகள் அவரை சிறந்ததொரு நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது. தற்போது சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய […]

Continue Reading

ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’.

சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற ‘ஜெய் பீம்’, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது ‘ஜெய் பீம்’ படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள். ஜோதிகா […]

Continue Reading

சுந்தர்.C நடிப்பில் K.திருஞானம் இயக்கும் “ஒன் 2 ஒன்”

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் “ஒன் 2 ஒன்” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் K.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இப்படத்தில் சுந்தர்.C க்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]

Continue Reading

“என் எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவம் தான் #விருமன்.

“ என் எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவம். வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வார்கள். அந்தத் தவறுகளை யாராவது தட்டிக் கேட்கணும். அப்பா, அம்மா, அண்ணன், அக்கான்னு யாரோ ஒருத்தர் அதை சுட்டிக்காட்டணும். நமக்கு நல்லது செய்யும் அந்த உறவு தான் நல்ல உறவு. அந்த நேர்மையை பேச வருபவன் தான் “விருமன்”. தட்டிக் கேட்கிறவனாக “விருமன்” இருப்பான். “விருமன்” தான் கார்த்தி. குலசாமி பெயர். விருமன்னா தேனிப்பக்கம் பிரம்மன் என்று சொல்வாங்க. அதுதான் கதைக்களம்.” என்றார் டைரக்டர் […]

Continue Reading

‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் இணைந்து வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் ரா. பரமன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’. இதில் நடிகர் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் காளி வெங்கட்  மற்றும் நடிகை ரித்விகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ராஜேஷ் யாதவ் மற்றும் […]

Continue Reading

இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான “முதல் நீ முடிவும் நீ”, ஜீ5 தளத்தில் ஜனவரி 21, 2022, வெளியாகிறது!

“முதல் நீ முடிவும் நீ” இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாக கொண்ட மென்மையான டிராமா திரைப்படம் ஆகும். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியை பெறுவது பற்றியான கதைக்கருவில் இப்படம் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் சென்னையில் 90’s களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இந்தக்கதை விவரிக்கப்பட்டுள்ளது. அந்த இளைய சமுதாய சிறுவர்களின் மனவெளியைப் பிரதிபலிப்பதுடன், அந்தக் காலத்தின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பின்னர் கதை வேறொரு இடத்திற்கு நகர்ந்து, வாழ்க்கையின் […]

Continue Reading

தடைகளைக் கடந்து ‘நீ சுடத்தான் வந்தியா ‘ படம் 2022 ஜனவரியில் உலகமெங்கும் திரைக்கு வருகிறது !

டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘நீ சுடத்தான் வந்தியா’.இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார் .ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது. 2022 ஜனவரியில் வருகிறோம் இப்படம் டிசம்பரில் 31 தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த டிசம்பரில் ஏராளமான படங்கள் வருவதால் இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போயிருக்கிறது .பொதுவாக விழாக் காலங்களில் பெரிய படங்களும் நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்களும் வெளியாகும் .அப்போது சின்ன படங்களை வெளியிட்டால் அந்தப் பரபரப்பு ஓசையில் இவை காணாமல் […]

Continue Reading

இசைமேதை’ எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன தொழில்நுட்பத்தில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி. பக்தி பாடல்களை பாடி நம் கண் முன்னே இறைவனை கொண்டு வந்து நிறுத்திய தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர்.இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச சுப்ரபாதத்தை பாடிய இசைத்தட்டு 1963 ஆம் ஆண்டு வெளியானது. திருமாலின் புகழைப் பாடும் வெங்கடேச சுப்ரபாதம்; திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலிபரப்பு செய்தது மட்டுமின்றி : 1975 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான […]

Continue Reading

“குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் சொல்லும் அழகான படைப்பாக வேலன் இருக்கும்”- மீனாக்‌ஷி கோவிந்தராஜன் !

Skyman Films International கலைமகன் முபாரக் தயாரித்து, கவின் இயக்கத்தில், பிக்பாஸ் முகேன் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் ஒரு பகுதியாக தானும் இருப்பதில், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் வெகு உற்சாகமாக இருக்கிறார். நடிகை மீனாக்‌ஷி ஏற்கனவே தனது அற்புதமான தோற்றத்தில், இளைஞர்களின் இதயங்களை வென்றுள்ளார். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு விதமான கதாபாத்திரங்களுக்கும் அட்டாகாசமாக பொருந்தக்கூடிய தனித்தன்மையான தோற்றப்பொலிவை ஜோதிகா, நஸ்ரியா நஷீம் போன்ற வெகு சில ஹீரோயின்களே பெற்றிருந்தனர், அந்த வரிசையில் அவர்களுக்கடுத்து […]

Continue Reading

நவீன தொழில்நுட்பத்தில் தயாராகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் ‘கலியுகம்’

பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்பரேட் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரித்து வரும் திரைப்படம் ‘கலியுகம்’. இதனை இயக்குநர் ப்ரமோத் சுந்தர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்டபார்வை’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் நடிகர் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு […]

Continue Reading

சாந்தனு, மஹிமா நடிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குண்டுமல்லி’ வீடியோ பாடலை சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிட்டது

எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் பேனரில் ராம் பிரசாத் மற்றும் ஷரண் தயாரிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் மஹிமா நம்பியார் நடித்துள்ள ‘குண்டுமல்லி’ என்கிற உற்சாகமான காதல் பாடலை இன்று தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிட்டது இந்த வீடியோ பாடலின் டீசர் டிசம்பர் 25-ஆம் தேதி இரண்டு மொழிகளிலும் வெளியானது. திருமண நிச்சயதார்த்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட காதல் மற்றும் குடும்ப உணர்வுகள் நிறைந்த பாடலாக இது உருவாகியுள்ளது. பாடல் வரிகள் வசீகரமாகவும், காட்சிகள் […]

Continue Reading

துபாயின் தங்க விசா பெற்ற முதல் தமிழ் நடிகர் ஆர் பார்த்திபன்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர் பார்த்திபன் பெற்றுள்ளார். சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற திரைப்பட ஆளுமையான பார்த்திபனுக்கு துபாயின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் விசாவை வழங்கினர். தனக்கு தங்க விசா வழங்கிய துபாய் அரசுக்கு பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து பேசிய அவர், “எனக்கு கோல்டன் […]

Continue Reading

தனுஷ் – வெங்கி அட்லூரி – சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணையும் இருமொழி திரைப்படத்தின் தலைப்பு ‘வாத்தி ‘

பல வெற்றி படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான   சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ் அடுத்ததாக  இரண்டுமுறை தேசிய விருது பெற்ற நடிகர் ‘தனுஷ்’ உடன் இணைந்து ‘வாத்தி’ (தமிழ்) / ‘SIR’ (தெலுங்கு ) என்ற தெலுங்கு மற்றும் தமிழில் புதிய இருமொழித் திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறது .இன்று இந்த படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு  சமூக ஊடகங்களில் திரைப்பட ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர் . சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்திலேயே ராங்டே […]

Continue Reading

கிறிஸ்துமஸ் நாளில் நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்பட டீசர் !

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும்  திரைப்படம் “வீரமே வாகை சூடும் “.  அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் 25.12.2021 அன்று வெளியாகிறது. மிக சமீபத்தில் தான் அறிவிக்கபட்ட இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் படத்தின்  அனைத்து கட்ட பணிகளும் முடிந்து  தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது […]

Continue Reading

குறுக்குவழிதிரைப்பட ஃபர்ஸ்ட்லுக்வெளியீடு

புதுமையான ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் தான் “குறுக்கு வழி”. இப்படத்தை N.T. நந்தா எழுதி, இயக்கியுள்ளார்.  K சிங் மற்றும் A .ஷர்மா  இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் துருவா, பிரனய் காளியப்பன், சினேகன், சாக்‌ஷி அகர்வால், ஷிரா கார்க் மற்றும் மிப்பு ஆகியோர் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். படத்தை எழுதி இயக்குவது மட்டுமின்றி, N.T.நந்தா ஒளிப்பதிவு செய்து இசையமைத்துள்ளார்.  இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர்-இயக்குனர்-ஒளிப்பதிவாளர்-இசையமைப்பாளர் N.T.நந்தா கூறுகையில்,  “நான் இதற்கு முன்பு 2017ல் வெளியான வல்ல தேசம் என்ற தமிழ்ப் படத்தைத் தயாரித்து இயக்கினேன். அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது நான் 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்கி வருகிறேன், அதற்கு நான் ஒளிப்பதிவும் செய்துள்ளேன். நாங்கள் இப்படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டோம்,  2022ல் இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளை செய்து வருகிறோம். இதற்கிடையேயான தருணத்தில் தான் , ‘குறுக்கு வழி’ என்ற தமிழ்த் திரைப்படத்தை உருவாக்கத் துவங்கினோம். தமிழ் சினிமாவை சர்வதேச தரத்திற்கு இணையாக தொழில்நுட்ப மற்றும் கதை அம்சங்களில் உருவாக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு. லண்டனைச் சேர்ந்த K சிங் மற்றும் A ஷர்மா தமிழ் திரைப்படம்  தயாரிக்க முழு ஆர்வம் காட்டியது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. அடுத்தடுத்து  எனது இயக்கத்தில் உருவாகவுள்ள திரைபடங்களை அவர்களே தயாரிக்கிறார்கள், அவை பிரமாண்டமாகவும் பெரிய அளவிலும் உருவாக்கப்படும். ஒரு நல்ல தமிழ் திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதில்  நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். கொரோனா தொற்றுநோய் கட்டத்தின் கடினமான காலங்களில் கூட என் கனவை கைவிடவில்லை. அந்த நேரத்தில் நான் இங்கேயே தங்கி, திரைப்படத்தை முடிக்க முடிவு செய்தேன். நான் திரைக்கதை எழுதி முடித்ததும், அந்தந்த கதாபாத்திரங்களுக்கு இங்கு இந்த மண்ணில் வாழும் நபர்களை  தேர்வு செய்யவே எண்ணினேன், துருவா, பிரனய் காளியப்பன், சினேகன், சாக்‌ஷி அகர்வால், ஷிரா கார்க் மற்றும் மிப்பு ஆகியோர் இந்தப் படத்திற்காக முழு அர்ப்பணிப்பை தந்து, நடித்துள்ளார்கள்.  படத்தின் டீசரை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம், டீசர்  எங்களின் உழைப்பை இப்படத்தின் முழுப்பெருமையையும் வெளிப்படுத்தும் என நம்புகிறேன். எங்கள் திறமையை வெளிப்படுத்தும் முதல் கட்டமாக குறுக்கு வழி திரைப்படம் இருக்க வேண்டும் என, இப்படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளோம், குறைந்த பட்ஜெட்டில், குறைந்த இடங்களிலேயே படமாக்கியிருந்தாலும், இப்படம் சிறந்த தொழில்நுட்ப தரத்தில் இருக்கும் என்றார். பாடலாசிரியர் மற்றும் நடிகர் சினேகன் கூறியதாவது… “ இந்த திரைப்படத்தில் இணைந்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி, இந்த படத்தில் நான் இணைந்ததற்கு காரணம் இயக்குனர் நந்தா சார். லண்டனில் பிசியாக இருக்கும் நந்தா, தமிழ்நாட்டிற்கு வந்து நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார். அவர் பல திறமைகளை கொண்ட நபர். அவர் எல்லா துறைகள் பற்றியும் அறிந்தவர்,  அதை எளிமையாக கையாள தெரிந்தவர். இயக்குவதை தாண்டி, ஒளிப்பதிவையும் கவனித்துள்ளார்.  இந்த படத்தில் நான் பாடல்வரிகள் எழுதியுள்ளேன் மற்றும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளேன்.  படத்தின் முதன்மை கதாபாத்திரம் திருடனாக வரும், அப்போது நல்லவனாக இருக்கும் ஒருவன், இவர்களை சந்தித்த பிறகு என்ன ஆகிறான், அவன் நல்லவனா கெட்டவனா என ஊசலாடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நடிகர் துருவா கூறியதாவது…. “குறுக்கு வழி திரைப்படம் நான்கு திருடர்களை பற்றிய கதை, அதில் நானும் ஒருவன். நான் இதுவரை எனது திரைப்பயணத்தில் எதிர்மறை கதாபாத்திரம் செய்ததில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக ஒரு  புதிய  அனுபவமாக இருந்தது.  இந்த படம் தொழில்நுட்ப ரீதியாக உலகதரம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். இயக்குனர் நந்தா இந்த படத்தை தரம் வாய்ந்த ஒன்றாகவும்,  மிகவும் நேர்த்தியாகவும் எடுத்துள்ளார்.  நடிகர் பிரனய் கூறியதாவது… “இந்த படம் ஒரு நல்ல தியேட்டர் அனுபவமாக இருக்கும். குறுக்கு வழி திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக இருக்கும்.” நடிகை ஷிரா காக் கூறுகையில்,  “இந்த ஃபர்ஸ்ட் லுக்கின் மூலம் எங்கள் படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பைப் பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த திரைப்படம் தனிப்பட்ட முறையில் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இந்த பர்ஸ்ட் லுக் படத்தின் தரம் மற்றும் ஒரு குழுவாக நாங்கள் உழைத்த கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது. இப்படம்  ரசிகர்களால் நிச்சயமாக  பாராட்டப்படும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம். சினேகன் சாரின் கேரக்டரைப் போலவே, என் கதாபாத்திரமும் அழுத்தமாக இருக்கும். கடந்த இரண்டு வருடங்களாக இயக்குநர் நந்தாவின் உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் கடும் உழைப்பை நான் பார்த்து வருகிறேன். தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத அம்சங்களில் அவருடைய திறமையை பார்த்து நான் அடிக்கடி வியப்படைந்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில்  அவர் மிகவும் ஆர்வத்துடன் உழைத்துள்ளார், தொற்றுநோய் கட்டத்திலும் கூட, அவர் லண்டனுக்கு செல்லவில்லை, இந்த திரைப்படத்தை எந்த நிலையிலும் முடிக்கவே விரும்பி இப்போது முடித்திருக்கிறார்.  தயாரிப்பாளர் K. சிங் கூறுகையில்.. “எங்கள் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்தப்படத்தை பற்றி இதற்கு மேல் இப்போது சொல்ல விரும்பவில்லை. விரைவில் இப்படம் உங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் காத்திருங்கள் நன்றி”. தயாரிப்பாளர் A ஷர்மா கூறியதாவது… “ரசிகர்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள் தொடர்ந்து, இங்கு வருவதே தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர்களாக பயணத்தைத் தொடங்குவதற்குக் காரணம், இந்த ‘குறுக்கு வழி’ திரைப்ப்டம் ஒரு சிறிய படிதான், விரைவில் தமிழ் திரையுலகில் பிரமாண்டமான திரைப்படங்களை கொண்டு வரவுள்ளோம். நாங்கள் ஏற்கனவே சில திரைப்படங்களை தயாரிப்பதற்கான திட்டங்களை உறுதிப்படுத்தியுள்ளோம். ஆனால் தொழில்முறை காரணங்களால் அவற்றைப் பற்றி இப்போது பேச முடியாது. இயக்குநர் நந்தாவின் தலைமையில் நாங்கள் எங்கள் முயற்சியை இங்கு ஆரம்பித்துள்ளோம். சிறந்த திரைப்படங்களைத் தயாரிப்பதன் மூலம், எங்கள் தயாரிப்பு நிறுவனம், வரும் ஆண்டுகளில் சிறந்து விளங்கும் என்று என்னால் உறுதியளிக்க முடியும். சமுதாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.”தயாரிப்பு – K. சிங், A ஷர்மா எழுத்து, இயக்கம், இசை, ஒளிப்பதிவு – N.T.நந்தா எடிட்டர் – R.S.அக்னி கலை – ஆரோக்கியராஜ்  ஸ்டண்ட்ஸ் – கத்தி நரேன் பாடல் வரிகள் – சினேகன், சீர்காழி சிற்பி  தயாரிப்பு நிர்வாகி – K.K.S. ராஜா தயாரிப்பு மேலாளர்- KNR சாமி மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Continue Reading

ஆதிராஜனின் “நினைவெல்லாம் நீயடா” படத்தில் பிரஜன் ஜோடியாக மனிஷா யாதவ்!!

இசைஞானி இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”. இந்த படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் . சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.இதில் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக, வழக்கு எண் 18 /9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை […]

Continue Reading

உலகிலேயே முதன்முறையாக தமிழ் மொழியில் ‘சுவை ஆறு’ என்ற தலைப்பில் குறும்படத் தொடர் ஒன்று தயாராகிறது.

குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் சென்னை மண்டல கூட்டம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிகரம் ஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இயக்குநர் பேரரசு, நடிகர் ஸ்ரீராம், நடிகை ‘கம்பம்’ மீனா, ஊடகவியலாளர் மணவை பொன். மாணிக்கம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவுக்கு வருகை தந்த பார்வையாளர்களையும், குறும்பட படைப்பாளிகளையும் குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் மாநில செயலாளரான பென்னெட் ஜே ராக்லாண்ட் வரவேற்று, சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் சென்னை மண்டல குழு படைப்பாளிகள் சங்க தலைவராக […]

Continue Reading