இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலை பார்க்க முடிகிறது – பிரதமர் மோடி பேச்சு

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவு பார்க்கா முடிகிறது, என்று தெரிவித்துள்ளாது. இது குறித்து மேலும் பேசிய அவர், ”நான்கு சகாப்தங்களுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய வீரர்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவில் பார்க்க முடிகிறது. கிராமங்களில் அதிகப்படியான விளையாட்டு போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். ஒவ்வொருவரின் […]

Continue Reading

மணிப்பூர் மாநில கவர்னராக இல.கணேசன் பதவி ஏற்றார்

மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இன்று (ஆக.27) காலையில் கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் பதவி ஏற்புவிழா நடந்தது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் குமார், இல.கணேசனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய பதவி ஏற்பு நிகழ்ச்சி 10 நிமிடத்தில் நிறைவடைந்தது. கவர்னராக பதவி ஏற்றதும் அவருக்கு மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரென்சிங் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இன்று பதவி […]

Continue Reading

இந்தியாவில் அக்டோபர் மாதம் கொரோனா 3 வது அலை உச்சமடையும்! – நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், கேரளா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவை மூன்றாவது அலை தாக்குவதை தவிர்க்க முடியாது, என்று எச்சரித்துள்ள நிபுணர்கள் அக்டோபர் மாதம் மூன்றாவது அலை உச்சமடைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் சிறிது சிறிதாக அதிகமாகி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நிபுணர் குழு, கொரோனா 2ம் அலையின் தாக்கத்தில் பாதியளவேனும் 3ம் அலையில் இருக்கக் கூடும் என்று கணித்திருப்பதோடு, […]

Continue Reading

போலி தடுப்பூசி மையம் நடத்தி வந்த 2 பேர் கைது!

உலக அளவில் கொரோனாவில் இருந்து மக்களை காக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், தற்போது ஒரே தீர்வாக தடுப்பூசிகள் உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளன. இதற்கிடையே, இந்தியாவின் சில மாநிலங்களில் போலியான கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பலர் தயக்கம் காட்டி வரும் நிலையில், […]

Continue Reading

மாநிலங்களின் உரிமைகள் மீது பாஜக வைத்திருக்கும் குறைந்த மரியாதை காரணமாக கூட்டாட்சி அழிக்கப்படுகிறது..தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின்

மாநிலங்களின் உரிமைகள் மீது பாஜக வைத்திருக்கும் குறைந்த மரியாதை காரணமாக கூட்டாட்சி அழிக்கப்படுகிறது மாநிலங்களின் உரிமைகள் மீது பாஜக வைத்திருக்கும் குறைந்த மரியாதை காரணமாக கூட்டாட்சி அழிக்கப்படுகிறது மற்றும் இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பது அவசியம். சமீபத்திய பாராளுமன்ற கூட்டத்தொடர் எங்கள் ஒற்றுமையைக் கண்டது. அது வலுவாக வளர வேண்டும் மற்றும் கூட்டு அறிக்கையை திமுக ஆதரிக்கிறது. – மாண்புமிகு முதல்வர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் காணொலி மூலம் முக்கிய ஆலோசனை பாஜகவுக்கு […]

Continue Reading

12 முதல் 17 வயதுடைய சிறார்களிடம் தடுப்பூசியை பரிசோதிக்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் திட்டம் ..

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பம் கொரோனா தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பம் பரிசோதனைக்கு அனுமதி கேட்டு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது 12 முதல் 17 வயதுடைய சிறார்களிடம் தடுப்பூசியை பரிசோதிக்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் திட்டம் .ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பம் பரிசோதனைக்கு அனுமதி கேட்டு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது

Continue Reading

நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை வழக்கு – துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வந்த உத்தம் ஆனந்த் என்பவர், கடந்த மாதம் 28 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். நடைபயிற்சிக்கு சென்ற அவரை ஆட்டோவில் மோதி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மாநில அரசு சிபிஐ-யிடம் ஒப்படைத்துள்ள நிலையில், விசாரணையை தொடங்கியுள்ள சி.பி.ஐ அதிகாரிகள் நீதிபதி கொலை தொடர்பாக துப்பு கொடுப்போருக்கு பரிசு அறிவித்துள்ளனர். அந்த வகையில் நீதிபதி கொலை தொடர்பாக […]

Continue Reading

மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி – கர்நாடக முதலமைச்சர் பேச்சு

பெங்களூரு மாநகராட்சி சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்துக் கொண்டு தேசிய கொடி ஏற்றிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நிகழ்ச்சியில் பேசும் போது, மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும், என்று தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், ”தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாங்கள் மேகதாதுவில் புதிய அணையை கட்டியே தீருவோம். இந்த திட்டத்தில் இருந்து கர்நாடக அரசு பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இது குடிநீருக்கும், மின் உற்பத்திக்கும் […]

Continue Reading

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம் – நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சியினர் வாய்பாயின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Continue Reading

நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

இந்திய சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “உங்கள் அனைவருக்கும் 75-வது சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்த ஆண்டு சுதந்திரத்தைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அம்ரித் மகோத்சவ் நாட்டு மக்களிடம் புதிய ஆற்றலையும், உணர்வையும் […]

Continue Reading

ஓணம் பண்டிகை கொண்டாட தடை!

கொரோனா மூன்றாவது அலை வரக்கூடும் என்ற அச்சம் இந்தியா முழுவதும் நிலவி வருகிறது. அதே சமயம், மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் ஓணம், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடுவதற்கும், கூட்டம் சேருவதற்கும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று (ஆக.12) முதல் அமலுக்கு […]

Continue Reading

மேகதாது அணைக்கு ஒப்புதல் – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது மேகதாது அணைக்கு ஒப்புதல் தருவதாக நான் டெல்லி சென்றபோது அமைச்சர்கள் கூறினார்கள் – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Continue Reading

லடாக்கில் இந்திய ராணுவம் தாக்குதல் ஒத்திகை

கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் பீரங்கிகளில் சென்று தாக்குதல் ஒத்திகை நடத்தினர். கிழக்கு லடாக்கின் கோக்ரா பகுதியில் இந்திய – சீனப்படைகள் வெளியேறிய நிலையில் பிரங்கிகளில் சென்று ஒத்திகை நடத்தியுள்ளனர். சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் லே பகுதியிலும் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

Continue Reading

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தம்!

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆனால், அந்த பதிவு பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, அந்த பதிவை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியது. இந்த நிலையில், ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் டுவிட் பதிவில், “ராகுல் […]

Continue Reading

மும்பை காவல்துறையை கதிலங்க செய்த தொலைபேசி அழைப்பு!

மும்பை காவல்துறைக்கு நேற்றைய தினம் மறக்க முடியாத தினமாக அமைந்துவிட்டது. அதற்கு காரணம், தொலைபேசி அழைப்பு ஒன்று தான். ஆம்ல், நேற்று இரவு மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில், எதிர்முனையில் பேசிய மர்ம நபர், மும்பையின் நான்கு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால், ஒட்டு மொத்த மும்பை காவல்துறையும் களத்தில் இறங்கியதோடு, வெடிகுண்டு செயல் இழக்க வைக்கும் நிபுணர்கள் மற்றும் ஜிஆர்பி குழு ஆகியோர் இணைந்து மும்பையின் முக்கியமான இடங்களில் தீவிர […]

Continue Reading

பாகிஸ்தானில் இந்துக்குக்களுக்கு எதிராக தொடரும் அட்டூழியங்கள்!

பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெறும் அட்டூழியங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் ரகிம் யார் கான் மாவட்டம், போங் நகரில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. கோவிலை வெறித்தனமாக தாக்கிய கும்பல், கோவிலுக்குள் உள்ள சாமி சிலைகளையும் சேதப்படுத்தினர். தாக்குதல் நடத்தும்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை இந்து சமுதாய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் வங்வானி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading

அயோத்தியில் ராமர் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக வரும் டிசம்பர் 23ம் தேதி திறக்கப்படும்

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக வரும் டிசம்பர் 23ம் தேதி திறக்கப்படும் என தகவல்

Continue Reading

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 10 வரை நீட்டிப்பு.

செப்டம்பர் 12 ல் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 10 வரை நீட்டிப்பு. ஆகஸ்ட் 11 முதல் 14 வரை விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் சரிசெய்துகொள்ள அவகாசம்.

Continue Reading