500 மருத்துவ பணியாளர்களுக்கு 2 மாத காலத்திற்கு மதிய மற்றும் இரவு உணவுகளை ஜியோ இந்தியா பவுண்டேசன்

Uncategorized

சென்னை கிங்ஸ் அரசு கொரோனா மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட 500 மருத்துவ பணியாளர்களுக்கு 2 மாத காலத்திற்கு தேவையான மதிய மற்றும் இரவு உணவுகளை ஜியோ இந்தியா பவுண்டேசன் நிறுவனம் இலவசமாக வழங்குகிறது.

இதன் தொடக்க விழாவில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்துகொண்டு, உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் . மேலும் ஜியோ இந்தியா பவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் பிரியா ஜெமிமா, அறங்காவலர்கள் ஜியார்ஜ் மற்றும் டி.என்.சந்தோஷ் குமார் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *