அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் (AICF) தலைவர் டாக்டர் சஞ்சய் கபூர், பாரத் சிங் சவுகான், செயலாளர் AICF ஆகியோர், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழக அரசுடன் இணைந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
ஒலிம்பியாட் போட்டிகளை சுமூகமான முறையிலும் மற்றும் வெற்றிகரமானதாகவும் நடத்துவதில் இது மிகப் பெரிய படியாகும் என்று இது குறித்து டாக்டர் கபூர் கூறினார். இச்சந்திப்பின்போது நரேஷ் சர்மா, பொருளாளர் AICF மற்றும் டீம் இந்தியா அணியும் உடனிருந்தனர்.
திரு சௌஹான் கூறுகையில், “போட்டிகள் நடத்த திட்டமிட்டபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, மகாபலிபுரத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருக்கும் AICF குழுவினரின் மனநிலை மிக உற்சாகமாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.
சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா, புகழ்பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவது, இதுவே முதல் முறை ஆகும். இப்போட்டிக்காக 200க்கும் மேற்பட்ட அணிகள் ஏற்கனவே பதிவு செய்துள்ளன.