தண்ணீர் இல்லாமல் தவிக்கும் கோவை மக்கள்; வஞ்சிக்கும் மாநகராட்சி ஆணையர்

செய்திகள்

கடந்த அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சி மக்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு மக்களின்அடிப்படை வசதிகள் உடனுக்குடனே நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சி அமைந்தபின் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராவின் அலட்சியத்தால் 20 நாட்களுக்கு ஒரு முறைமட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், குடிநீர்குழாய்களை பராமரிக்கும் லீக்கேஜ் ஒப்பந்தத்தை இந்த துறையில் அனுபவமே இல்லாத திமுக வட்டச்செயலாளர், பகுதி செயலாளர்களுக்கு மாநகாட்சி ஆணையர் வழங்கியுள்ளதால் அவை பராமரிப்பின்றி கிடக்கின்றன.விடியா அரசால் கோவை மக்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா மற்றும் திமுக நிர்வாகிகள்  மக்களை வஞ்சித்து வருகிறார்கள் என்பதே நிதர்சனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *