தமிழக பெண் தலைவர்களில் தனித்து தெரியும் கனிமொழி கருணாநிதி.

Uncategorized செய்திகள்

தமிழகத்தின் பெண் தலைவருக்கான வெற்றிடத்தை தனது தொடர் பணிகளால் கனிமொழி கருணாநிதி நிரப்பி வருவதாக திமுக உடன்பிறப்புகள் புகழராம் சூட்டி வருகின்றனர்.

திமுக-வின் மகளிரணி செயலாளர் மற்றும் தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி கருணாநிதி, அவரின் தந்தையைப் போலவே அரசியல்- கலை இலக்கியம் என பல்வேறு துறைகளிலும் துடிப்பாகவும் செயல்பட்டு வருகிறார். கலைஞர் அவர்களைக் குறித்து எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் நினைவுகூறுவது அவரின் சுறுசுறுப்பும், எந்த கேள்விக்கு மொழியை லாவகமாக பயன்படுத்தி உடனடியாக பதிலளிக்கும் திறமையும் பலரையும் கவர்ந்து வருகிறது. திமுக-வில் பல்வேறு தலைவர் இருந்தபோதும், கலைஞரைப் போன்று மொழி ஆளுமை மற்றும் ஓய்வின்றி பணியாற்றி வருவதாக திமுகவினர் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

தலைநகரான டெல்லியில் நாடாளுமன்ற பணிகள் மற்றும் தேர்தல்க்கூட்டணி உள்ளிட்ட கட்சி சார்ந்த ஒருங்கிணைப்பு பணிகள் ஒருபுறம் கவனித்திக்கொண்டு வருகிறார். நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் கலைஞர் அவர்கள் உடனடியாக தனது கருத்தைப்பதிவு செய்வார், மாநில கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளும் அவரின் கருத்தை ஏற்றோ அல்லது மறுத்து உடனடியாக எதிர்வினையாற்றுவார்கள். தொடர்ச்சியாக, மொழி உரிமை மற்றும் மகளிர் நலன்சார்ந்து பல்வேறு பிரச்சனைகளில், கனிமொழியின் குரல் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உடனடியாக எதிர்வினைகளை ஏற்படுத்தியது.கடந்த ஆண்டு விமான நிலையத்தில் பாதுகாவலர் ஒருவர் அவரிடம் பேசியது, நாடு முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிரான ஒரு போராட்டமாகவே மாறியது. தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்கள்- வடகிழக்கு- பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் என நாடுமுழுவதும் கனிமொழி அவர்கள் தொடங்கிய இந்தி தெரியாது போடா என்ற குரல் காட்டுத்தீயாக பரவியதை பாஜக உள்ளிட்ட எந்த கட்சியும் எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பில்லை. கலைஞருக்குப் பிறகு, தமிழ்நாட்டில் எந்த ஒரு தலைவரின் குரலும் இவ்வளவு விரைவாக நாடுமுழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்களை இணைத்திருக்க வாய்ப்பில்லை.

ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு பெண் தலைவர்கள் இருந்த நிலையில் யாரும் அவரின் இடத்தை நிரப்பவில்லை. அதிமுக-வில் இருந்து விலக்கப்பட்ட சசிகலா தான் அக்கட்சியின் தலைவர் என மாநிலம் முழுவதும் கூறி வரும் நிலையிலும் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது. பாஜக-வின் வானதி ஸ்ரீவாசன் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றாலும், அவர் தமிழக மக்களின் மனதை வெல்லவில்லை. பாஜகவின் குரலாக அவர் தொடர்ந்து பேசி வந்தாலும், அவரின் குரலை கோவை மக்களேக்கூட எதிரொலிக்கவில்லை. வானதி ஸ்ரீனிவாசன், அதிமுக வின் கோகுல இந்திரா, வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோரை இளம் தலைமுறையினர் வெறும் மீம் கண்டென்டாகவே பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *