சுழல் வெப் சீரிஸ் விமர்சனம் | Suzhal: The Vortex Web Series Review

சினிமா

விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் & காயத்ரி தயாரிப்பில் பிரம்மா, அனுசரண் முருகையன் ஆகியோர் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி என நான்கு முக்கியமான பாத்திரங்கள், இவர்கள் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். அதிலும் கதிரை விட ஸ்ரேயா ரெட்டி போலீஸ் பாத்திரத்தில் மிடுக்காக வலம்வருகிறார். தங்கையை தொலைத்த பரிதவிக்கும் அக்காவாக ஐஸ்வர்யா ராஜேஷ், சிக்கலில் மாட்டிகொண்டு விழிக்கும் பார்த்திபன் என தங்களது பாத்திரங்களை நிறைவாகவே செய்துள்ளனர். இவர்களை தவிர வரும் சந்தான பாரதி உள்பட துணை நடிகர்களுமே சிறப்பாகவே நடித்துள்ளனர்.வெப் சீரிஸின் துவக்கமே சிமென்ட் பாக்டரியில் வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சம்பள உயர்வு கேட்டு ஆரம்பித்த இந்த போராட்டம் கடைசியில் போலீஸ் தடியடியில் சென்று முடிகிறது. இந்நிலையில் திடீரென அந்த பாக்டரிக்கு யாரோ தீ வைக்க முழுவதுமாக எரிந்து சாம்பலாகி விடுகிறது. இதற்கு காரணம் யூனியன் லீடர் பார்த்திபன் தான் என நிர்வாகம் போலீஸில் புகாரளிக்க, அவர் கைது செய்யப் படுகிறார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பார்த்திபனின் மகள் காணாமல் போகிறார். பார்த்திபன் மகள் எங்கே? உண்மையில் பார்த்திபன் தான் அந்த பாக்டரியை கொளுத்தினாரா? இதற்கு பின்னணியில் இருக்கும் மர்ம காரணங்கள் என்ன? என்பதே கதைச்சுருக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *