நெய்தல் விழாவின் முன்னோட்ட நிகழ்வாக, ‘Aravani Art Project’ குழுவினரின் சுவரோவியப் பணிகள் நடைபெற்று வரும் தருவைகுளம் பகுதியில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் இணைந்து சுவரோவியங்களை வரைந்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து கனிமொழி கருணாநிதி அவர்கள் நெய்தல் நிகழ்ச்சியின் அவசியம் மற்றும் சிறப்புகள் குறித்து விளக்கமளித்தார்.
இடம்: தூத்துக்குடி – தருவைக்குளம் ரோடு – கோமஸ்புரத்தில் உள்ள ராஜிவ் காந்தி நகர் விட்டு வசதி வாரிய குடியிருப்பு.