அதிமுகவில் நிறைய தவறுகள் நடப்பதால் இன்னும் பல நிர்வாகிகள் திமுகவில் இணைவார்கள் – நடிகர் ஆனந்தராஜ்

செய்திகள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் ஆனந்தராஜ் அளித்த பேட்டி.

செப்டம்பர் 12-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நீட் தேர்வை மாநில அரசு சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும்.

நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை, தேர்வுக்கு முன் ஆடைக்கட்டுப்பாடு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மாணவியர் துப்பட்டா அணிவதைத் தடுக்க கூடாது.

துப்பட்டாவை பிடுங்குவதால், மாணவியர் அவமானத்துக்கு உள்ளாகின்றனர்.
நீட் தேர்வுக்கு முன்பாக மாணவியரிடம் இருந்து துப்பட்டாவை பிடுங்குவதை எதிர்த்து, வழக்கு தொடர உள்ளேன்.

தமிழ்நாட்டை யாருக்கெல்லாம் பிரித்து தரலாம் என்று பேசிக்கொண்டிருக்கின்றனர்.

மாநிலத்தை பிரிக்கவேண்டும் என்ற பேச்சை யார் எடுத்தாலும், பதவியை துறந்துவிட்டு, மீண்டும் தேர்தலை சந்திக்கும் போது சொல்ல வேண்டும்.

இப்போது சொல்லக்கூடாது.

கொங்கு மக்களை பற்றி அரசியல்வாதிகளை விட எனக்கு நன்றாக தெரியும்

கொங்குநாடு என்பது மக்களின் உணர்வு அல்ல.

மார்க்கண்டேய அணையை நம் கண்களுக்கு தெரியாமலேயே கட்டி உள்ளனர்.

கிருஷ்ணகிரியில் இருக்கும்
கே.பி.முனுசாமிக்கு கர்நாடக அரசு அணை கட்டியது எப்படி தெரியாமல் போனது?

கே.பி.முனுசாமி இதுகுறித்து விளக்கம் தர வேண்டும்.

நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிரிவினை கோஷத்தை எழுப்பலாம்.

பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அரசியல்வாதிகள், வாயைக் கட்டிக்கொள்ள வேண்டும்.

அதிமுகவில் என்ன தவறு நடக்கிறது என்று எனக்கு நன்றாக தெரியும்.

அதிமுகவில் இருந்து இன்னும் பலர் திமுகவில் இணைய காத்திருக்கின்றனர்.

நான் திமுகவில் இணைந்தால் அதில் என்ன தவறு?

நான் திமுகவில் இணைவதா? வேண்டாமா? என்று அவர்கள் தான் விரும்ப வேண்டும்.

காலம் கனியும் போது நல்ல முடிவை எடுப்பேன்.

தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்தி மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதைத் தடுக்க வேண்டும்.

இயக்குநர்களுக்கு கற்பனை சுதந்திரம் தேவை.

ஒளிப்பதிவு திருத்த சட்டத்தில் நிறைய தவறு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *