சென்னையை சேர்ந்த மனநல சிகிச்சை நிபுணரான பிளாரன்ஸ் நளினி. இவர் கடந்த ஆண்டு மிஸஸ் இந்தியா பட்டம் வென்றவர். கடந்த ஆண்டு அமெரிக்க- இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக் அழகிப் போட்டியில் பங்கேற்றார். அதில் சென்னையை சேர்ந்த பிளாரன்ஸ் நளினி தேர்வு ஆனார். மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2021-ம் ஆண்டுக்கான மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக் பட்டத்தை பிளாரன்ஸ் ஹெலன் நளினி வென்றார். அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடந்த மிஸஸ் உலக அழகி மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்-2022’ என்ற பட்டத்துக்காக இந்தியா சார்பில் பிளாரன்ஸ் நளினி பங்கேற்றார். உள்ளார். இதில் டைட்டல் பதக்கம் வென்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.
அப்போது பிளாரன்ஸ் நளினி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக் அழகு போட்டியில் பங்கேற்று டைட்டல் பதக்கம் வென்று உள்ளேன். மிஸஸ் இண்டர்நேஷனல் வேல்ர்டு பீப்பிள்ஸ் சாய்ஸ் வின்னர் 2022 என்ற பதக்கத்தை பெற்று உள்ளேன். இதன் முலம் அடுத்த கட்ட போட்டியில் பங்கேற்க உள்ளேன். 42க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்து பங்கேற்றனர். போட்டியில் நான் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள திருமதி உலக அழகி போட்டியில் 150 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்ள உள்ளன இதில் இந்திய சார்பில் நான் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.