சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுராந்தகம் திருத்தணி பகுதிகளில் தலா 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது வளி மண்டலா மேலடுக்கு சூழ்ச்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி கோயம்புத்தூர் தேனி கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் பெரம்பலூர் அரியலூர் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ஏனைய வட மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வருகின்ற 21 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனிடையே வட மேற்கு வங்க கடலில் வருகிற 21-ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி கேரளா கர்நாடகா மாநிலங்களில் மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
