தமிழின் முதல் சினிமாடிக் ஐயப்பன் பாடல் “ஆருயிர் ஐயப்பா” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

செய்திகள்

தமிழில் எத்தனையோ ஐயப்பன் பற்றிய பக்திப் பாடல்கள் வந்துள்ளன.‌ ஆனால் முதல் முறையாக மிகப் பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டு முதல் சினிமாடிக் ஐயப்பன் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது ஆருயிர் ஐயப்பா ஆல்பம் பாடல். இந்த பாடலை ஸ்ரீ விஷ்ணு தயாரித்து இயக்கியுள்ளதோடு நடித்தும் இருக்கிறார். மேலும் இவருடன் இணைந்து வசந்த் பாடலை எழுதியுள்ளார்.

போடா போடி, பாரிஜாதம் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள இசை அமைப்பாளர் தரண் இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால் மற்றும் முத்துச்சிற்பி இருவரும் பாடியுள்ளதோடு நடித்தும் உள்ளனர்.

பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு ஏராளமான குழந்தைகள் மற்றும் நடனக் கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கு நடன இயக்குனர் அசோக்ராஜா நடனம் அமைத்துள்ளார். ஐயப்பனின் புகழ் பாடும் இந்த ஆருயிர் ஐயப்பா ஆல்பம் பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க காட்சி வடிவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ பாடல் பார்ப்பவர்களை நிச்சயம் பரவசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *