வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கலில் ஆர்ப்பரிக்கும் காவிரி

செய்திகள்

காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது இந்த நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு செல்லும் காவிரி ஆற்றில் இரு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ள நிலையில்தமிழகத்தின் எல்லையான பில்லிகுண்டலுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது இதனால் ஒகேனக்கல் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *