மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா நோட்டீஸ் கொடுத்துள்ளார் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஒவொரு ஆண்டும் ஜூலை மாதம் தொடங்குவது வழக்கம் கொரோன பெரும் தொற்றின் இரண்டாவது அலை முடிவிற்கு கொண்டு வருவதற்காக போராடிக் கொண்டிருக்கும் நிலை மழைக்காலக் கூட்டத் தொடருக்காக நாடாளுமன்றம் இன்று கூடியது இந்த கூட்டத் தொடர் அடுத்த மாதம் 13 ஆம் நாள் முடிகிறது தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கேட்டுக்கொண்டார் இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விதி 267 கீழ் அவையை ஒத்திவைப்பு விவாதம் நடத்த வேண்டும் என மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா நோட்டீஸ் விடுத்துள்ளார்
