இயக்குநர் ஜெகன் திறமையானவர்; பிகினிங் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்! – இயக்குநர் லிங்குசாமி

சினிமா

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் #பிகினிங். ஆசியாவின் பிளவு திரையில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிருக்கிறார்கள். அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது:

இயக்குநர் லிங்குசாமி பேசும்போது,

இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் அதாவது, ஒளிப்பதிவாளர் இந்த லென்ஸை உபயோகப்படுத்தினேன் என்றார், கலை இயக்குநர் புதியதாக ஒன்றை பயன்படுத்தினோம் என்றார். அது தான் புதியதாக படம் எடுப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுபவம். ஆனந்தம் படம் எடுத்தபோது என்ன உணர்ந்தேனோ, அதை இந்த படத்திலும் உணர்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மிக சவாலாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. மிகவும் திறமையான இயக்குநர், நுணக்கமான அழகான இயக்குநர் என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது. இப்படம் எடுப்பதற்கு ஜெகன் அம்மா தான் நிலத்தை விற்று பணம் கொடுத்தார் என்று தெரிந்ததும், இப்படத்தின் ஆதரமான அடித்தளம் அங்கேயே தொடங்கிவிட்டது. உனது அம்மாவும், எனது அம்மாவும் உணர்வு வேறு வேறு அல்ல. ஒரு சரியான நபருக்கு துணையாக இருக்கிறோம் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆகையால், அவ்வளவு சாதாரணமாக இந்த துறையை விட்டு செல்ல மாட்டீர்கள், இந்த துறையும் உங்களை விடாது.

இப்படத்தை பிருந்தா சாரதியும், எடிட்டர் லெனினும் பார்த்து விட்டு, இது விருது படமோ, ஓடிடி படமோ கிடையாது, திரையரங்கிற்கான படம் என்றார்கள். அதை 3 திரையரங்கில் உணர்ந்தேன். அதேபோல், இப்படம் வெளியானதும் இருக்கும் என்று நம்புகிறேன். பிகினிங் படத்தைத் தொடர்ந்து திருப்பதி பிரதர்ஸ் மற்றும் மாஸ்டர்பீஸ்-ம் பல நல்ல படங்களை வெளியிடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இவர்களைப் போல் சரியான ஆட்கள் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஆதரவளிப்பேன். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சிதான். என் பின்னாடி 40 பேர் இருக்கிறார்கள். அனைவரும் ஒரே எண்ணத்தில் சேர்ந்த கூட்டு முயற்சி தான் வெற்றியாகும். இதுவரை வெற்றிபெற்ற பெரிய கலைஞர்களுக்கும் அது நிகழ்ந்துள்ளது.

இப்படத்தில் நடித்த அனைவரையும் நன்றாக நடித்திருக்கிறீர்கள். பாராட்டினால் எல்லோரும் இயக்குநர் தான் காரணம் என்று கூறுவார்கள். இயக்குநர் அனைவரிடமும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். எதிர்காலத்திலும் என்னுடைய நிறுவன படங்களிலும் உங்களை பயன்படுத்துவேன். இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற காரணமாக இருந்த ஜான்சன் சாருக்கு நன்றி.

இதுவரை எனது அனைத்து படங்களுக்கு ஆதரவளித்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கும் அதேபோல் ஆதரவு தாருங்கள்.

என் இயக்கத்தில் இரண்டு, மூன்று மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும். உத்தமவில்லன் படத்தை திறமையாக, கடின உழைப்போடு தான் எடுத்தார்கள். ஆனால், அப்படம் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்தது உண்மை தான். முதலில் நாங்கள் முடிவெடுத்தது #பாபநாசம் தான். ஆனால், கமல் சார் ஆசைப்பட்டதால் உத்தம வில்லன் படத்தை எடுத்தோம். அது அவருக்கும் தெரியும். உத்தமவில்லன் படத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய கமல் சார் ஒரு படம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார் என்றார்.
இடத்தை விற்று படம் எடுக்க பணம் கொடுத்த தாய்!
சரியான படத்தை தான் ரிலீஸ் செய்கிறோம்.. N.லிங்குசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *