அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான ஆண்கள் ஹேண்ட்பால் போட்டி ஆவடியில் உள்ள செயின் பீட்டர்ஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக முதல் மண்டல போட்டியான இதில் மொத்தம் 13 அணிகள் பங்கேற்றன.
இதன் இறுதிப் போட்டியில் செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி அணி 8க்கு 5 என்ற கோல்கள் கணக்கில் வேலம்மாள் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. செயின்ட் பீட்டர்ஸ் அணிக்கு அருள்ராஜ் ஹாட்ரிக் கோல்கள் அடித்து வெற்றி பெற உதவினார் .
சாம்பியன் பட்டம் வென்ற செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி அணி வீரர்களை கல்லூரியின் முதல்வர் சின்ன பாண்டியன், இயக்குனர் பூர்ண சந்திரன், டீன் புருஷோத்தமன், உடற்கல்வி இயக்குனர் இம்சமாம் உல் ஹக் ஆகியோர் பாராட்டினர்.
இந்த வெற்றி மூலம் செயிண்ட் பீட்டர்ஸ் கல்லூரி அணி திண்டுக்கல் பி எஸ் என் ஏ கல்லூரியில் நாளை மற்றும் நாளை மறுநாள் (10, 11ம் தேதி) நடைபெறும் மாநில அளவிலான மண்டலங்களுக்கு இடையேயான போட்டியில் விளையாடுகிறது.
……..