கொங்கு மண்டலத்தை திமுக கோட்டையாக இனி மாற்றுவோம்.

செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 300 நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

முதலமைச்சர் முன்னிலையில் அதிமுக , அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சி நிர்வாகிகள திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் .

கன்னியாகுமரி, இராமநாதபுரம் தஞ்சாவூர் , ஈரோடு , நாமக்கல் சேலம் , தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அதிமுக , அமமுக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடைபெற்ற விழாவில் திமுகவில் இணைந்தனர் .

2001ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்தபோது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட வ.து. நடராஜன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமமுக சார்பில் சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட வ.து.ந.ஆனந்த் ,. அதிமுகவை சேர்ந்த ஈரோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர் .

மேலும் அமமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் , ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அமைப்பு செயலாளர் உள்ளிட்டோர் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

புதிதாக இணைந்த மாற்று கட்சியினர் முதல்வருக்கு புத்தகம் மற்றும் திமுக கரை வேட்டிகளை பரிசளித்த நிலையில் , முதலமைச்சர் அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி திமுகவில் இணைத்துக் கொண்டார்.

” கொங்கு மண்டலத்தை திமுக கோட்டையாக இனி மாற்றுவோம் . அதிமுக கட்சி ஒரு முடிந்து போன கதை, அதன் தனித்துவத்தை இழந்து விட்டது “. என முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர், கோவிந்தராஜன் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *