அயலி விமர்சனம்- Web Series Review

சினிமா

ZEE5 ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு விலங்கு ஃபிங்கர்டிப், எஸ்2 மற்றும் பேப்பர் ராக்கெட் ஆகிய தொடர்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த வரிசையில் 2023 ஆம் ஆண்டுக்கான தனது முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான ’அயலி’ குறித்த அறிவிப்பை ZEE5 வெளியிட்டுள்ளது.மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் 8 ஆம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் தமிழ்ச்செல்வி என்ற ஒரு பதின்மவயது சிறுமியைப் பற்றிய உணர்ச்சி மிகுந்த சமூக நாடகமாக அயலி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவமெய்தியவுடன் பெண் குழந்தைகள் திருமணம் செய்துவைக்கப்பட வேண்டியவர்கள் என்று பழமையான பழக்கவழங்கங்களில் ஊறித் திளைத்துக் கொண்டிருக்கும் கிராமம், இந்த பாரம்பரிய மரபை கடைபிடிக்காவிட்டால் கிராம தெய்வமான அயலி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்ற நம்பிக்கை, இவற்றை தகர்த்தெறிந்து மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய போராடும் இளம் சிறுமி என்ற கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

பெண் வயசுக்கு வந்த உடனே கல்யாணம் பண்ணி வச்சிடனும்னு ஊர் கட்டுப்பாடு. அதை மீறி படிக்க முயற்சிக்கும் பெண்; ஃபீல் குட் வெப் சிரீஸ். குறிப்பாக கடைசி 4 எபிசோடுகள் தரமாக இருந்தது. வசனங்கள், படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பு, அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தது”

பெண் கல்வி, மாதவிடாய், மூடநம்பிக்கை என பெண்கள் குறித்து பேசும் ’அயலி’ தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *