ஒலிம்பிக் 2020: வில்வித்தை ரேங்கிங் சுற்றில் தீபிகா’ 9ஆவது இடம்!

விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் மகளிர் பிரிவு ரேங்கிங் சுற்றில் இந்திய வீராங்கனை 9ஆவது இடத்தை பிடித்தார். உலகமே எதிர்பார்த்து காத்துக் கிடந்த விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்கியுள்ளது. தொடக்க நாளான இன்று தகுதிநிலை தரவரிசை சுற்றில் இந்திய வீராங்கனைகள் பங்கேற்றனர். அந்த வகையில் வில்வித்தை போட்டிக்கான தரவரிசை சுற்று அதிகாலை நடைபெற்றது. அதில் இந்தியாவை சேர்ந்த தீபிகா குமாரி பங்கேற்றார். வில்வித்தை ரேங்கிங் சுற்றில் மொத்தம் 64 பேர் கலந்து கொண்ட நிலையில் ஒரு சுற்றுக்கு 6 என ஒவ்வொரு வீராங்கனையும் 72 முறை அம்புகளை எழுதினர். 13 முறை துல்லியமான இலக்கை தாக்கி 663 புள்ளிகள் பெற்ற தீபிகா குமாரி ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார். கொரிய வீராங்கனை அன் சன் என்பவர் 680 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார். முதல் மூன்று இடங்களையும் கொரிய வீராங்கனைகளே கைப்பற்றினர். கடந்த ரியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை தனிநபர் தகுதிப் பிரிவில் 20வது இடத்தை பிடித்த தீபிகா இந்த முறை 9வது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *